Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு நண்பர்களால் வரும் பிரச்சனை.. அதிஷ்டமும், ஆபத்தும் ஆன் தி வே
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அற்புதமான யோகம் கிடைக்கும். குரு 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதாவது பாவக ஸ்தானம், கெடுதல் ஸ்தானம். நண்பர்களால், கணவன் மனைவி உறவில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும், மனதுக்குள் அழுது கொண்டிருப்பீர்கள்.
நண்பரால் பிரச்சனை
வயதிற்கேற்றவாறு விதவிதமான பிரச்சனைகளைச் சந்தித்திருப்பீர்கள். நல்ல நண்பன் என்று நினைத்தீர்களோ அவரே உங்களை முதுகில் குத்தியிருப்பார். குரு பகவான் அஷ்டமத்தில் அமர்வதால் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீரென ஒரு நண்பர் வருவார் எனக்கு மிகப்பெரிய தேவை உள்ளது. அவசரத்துக்கு கைமாற்றாக உதவி செய்யுமாறு கேட்பார்.
பண விஷயத்தில் கவனம்
பண உதவி செய்தால் திரும்ப பணம் வராது. நண்பர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டால் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புண்டு. நல்லது செய்தாலும் தீமையை வாங்கும் நேரமாக இருக்கும். உதவி கூட செய்யலாம் ஆனால் கேரண்டி கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. பணம் களவாடப்படும். பெரும்பொருள் பறிபோகும் நிலை உண்டாகும்.
வருமானம்
சிலருக்கு 8 இல் குரு இருக்கும்போது பெரிய வருமானமும் இருக்கும். குரு தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்கு பெரும்பொருள் வரவு உண்டாகும். ஆனால், சிலருக்கு குறுக்கு வழியில் வரும் பணமாகவும் இருக்கும். பெரும்பொருள் வரவும் உண்டு. சிலருக்கு புதையல் யோகம் உண்டு. பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு பண வரவு இருந்தாலும், பல பேருக்கு பாதிப்பு ஏற்படும்.
தாம்பத்யம்
தாம்பத்ய வாழ்க்கையில் குறைவிருப்பவர்களுக்கு தாம்பத்ய குறைபாடுகளைப் போக்கும். சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவதற்கான வாய்ப்பு, வசதிகள் ஏற்படும். சிலர் சொந்த வாகனம் கார் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். படிக்கும் மாணவர்களுக்கு தீய நண்பர்கள் அமைவதற்கான வாய்ப்புள்ளது. நண்பர்களால் பல தீமைகள் ஏற்படும் காலமாக இருக்கும்.
ஆரோக்கியம்
நண்பர்களால் கெடுதல் வரும் வாய்ப்புள்ளதால் யாரிடம் பழகினாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இப்போது குரு 8 க்கு வருவதால் நல்ல படிப்பை கொடுக்கும் யோகம் உண்டு. குழந்தைப் பேறு அடைவதற்கான வாய்ப்பு உண்டு. கொழுப்பு சம்பந்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இதயம் சார்ந்த, நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications