Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புது வீடு, கார்.. மிதுன ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கொட்டும் அதிர்ஷ்டம்.. இந்த விஷயத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

Guru Peyarchi lucky zodiac signs

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

மிதுனம்

12 ஆம் வீட்டில் இருந்த குரு பகவான் இருந்து உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானின் பார்வையால் சிறப்பான பலன்களை பெறப் போகிறீர்கள். குரு பகவான் 5,7,9 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது.

உத்யோகம்

உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கியமாக உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற அங்கீகாரங்கள் கிடைக்கும். தொலைதூர தகவல்களால் நன்மை உண்டாகும். வெளிநாடு செல்ல முயற்சி செய்வோருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

தொழில் தடைகள்

தொழிலில் தடைகள் விலகி ஏற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் உயர்வு இருக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வாழ்க்கை துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த கணவன் - மனைவி இணைவார்கள். கணவன் - மனைவி மனம் விட்டு பேசுவார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

சொத்து

சகோதர உறவால் ஆதாயம் உள்ளது. கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீடு, நிலம், வண்டி, வாகனம், ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உள்ளது. குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். முதல் 6 மாதம் முன், பின் இருந்தாலும், அடுத்த 6 மாதம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் நிகழும்.

திருமணம்

பெண்களுக்கு சுப காரியங்கள் கைக்கூடும். திருமணத் தடையால் அவதிப்பட்டவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் மற்றும் உங்கள் பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தில் இறங்குவதற்கு முன்பு நன்கு யோசித்து செய்வது நல்லது.

ஆரோக்கியம்

ஜென்ம குருவால் ஆரோக்கியத்தில் தொந்தரவுகள் வந்து செல்லும். எனவே உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பண வரவு நன்றாக இருந்தாலும், நிதியை கையாள்வதில் கவனம் தேவை. முக்கியமாக முதலீட்டில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பரிகாரம்

அக்கம், பக்கத்தினருடன் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும். வீண் விவாதத்தை தவிர்த்து எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வியாழக்கிழமை காலை ஒரு மணி நேரம் மௌன விரதம் கடைபிடிக்கலாம். ராகவேந்தர் மற்றும் ஆஞ்சிநேயர் வழிபாடு தடைகளை விலக்கி நல்ல பலன்களை கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+