Guru Peyarchi: குரு கொடுத்தால் எவர் தடுப்பார்.. அதிர்ஷ்டம், பணத்தை அள்ளும் ராசியினர் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2025: 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியால் 3 ராசியினருக்கு ராஜயோகங்கள் உண்டாகப் போகின்றன. எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. 9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானத்துக்கு போய் உங்கள் ராசி லக்னத்தில் குரு அமருகிறார். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். பெண்ணால் பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் குருவால் அங்கீகாரம், விருது, புகழ் போன்றவை உங்களை வந்து சேரும். நீதிபதியின் துணை கிடைக்கும். பெரியோர் ஆசிர்வாதத்தால் வீட்டில் திருமணம், காது குத்துதல், படிப்பில் முன்னேற்றம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

Guru Peyarchi 2025 Rasi palangal 2025

100 சதவீத பலனைப் பெறப் போகின்றனர். துலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒரு மாற்றத்தைக் காண்பார்கள். குருவின் பார்வை ராசி லக்னத்தில் விழுவதால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எந்த இடத்திற்கு நீங்கள் போனாலும் மாலை மரியாதை தேடி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அதன் மூலம் ஆதாயத்தையும் காண்பீர்கள்.

பிரச்சனைகள் அனைத்தும் உங்களைவிட்டு விலகும். பணம், மகிழ்ச்சி, தெய்வ அனுகிரகம் கிடைக்கும். தானம் மிகவும் அதிகளவில் செய்வீர்கள். பூஜை, புனஸ்காரங்கள், கிரகப் பிரவேசம், ஆன்மீகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அபரிமிதமான பலன்களைப் பெறுவீர்கள். சகல ஐஸ்வர்யங்கள் கொட்டும். தான தர்மங்கள் செய்வது நல்ல பலன்களைத் தரும்.

அம்மா, அப்பாவுக்கு பாத பூஜைகள் செய்வது, நகை வாங்கிக் கொடுப்பது, வஸ்திர தானம் செய்வது, குல தெய்வ வழிபாடு அபிஷேக ஆராதனைகள் அனைத்துப் பலன்களையும் அள்ளிக் கொடுக்கும்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் கோபம், அன்பு இரண்டுமே நிறைந்தவர்கள். 7 ஆம் இடத்தில் குரு அமர்ந்திருந்த கடந்த ஓராண்டாக பல நன்மைகளைக் கொடுத்திருப்பார். குடும்பத்தில் பெண்களால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு திருமணம் நடைபெற்றிருக்கும். வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம் உண்டாகியிருக்கும். தற்போது குரு அஷ்டமத்தில் அமரப் போகிறார். இதில் பெரிய விடுதலை என்னவென்றால் 5 ஆம் இடத்துக்கு சனி போவதால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அனுபவிப்பவர்களாக விருச்சிக ராசிக்காரர்கள் இருப்பார்கள். எதிர்பாராத சொத்துகள், உயில்கள், அதிர்ஷ்டம் போன்ற அனைத்தும் 1 வருடத்திற்கு கிடைக்கும். நிலம், வீடு வாங்குவதற்கான யோகம் இருக்கும். அக்கம் பக்கத்தினர் வீட்டாருடன் நட்பு, இளைய சகோதரர்களின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள், பயணம் தொடர்பான ஆவணங்கள் போன்றவற்றால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படும். இதுபோன்ற சிறு சிறு பிரச்சனைகளால் அவதிப்படுவீர்கள்.

எதிர்பாராத குழந்தை பாக்கியம் உண்டாகும். அந்தக் குழந்தை பிறந்தவுடன் உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டமான யோகங்களைப் பெறுவீர்கள். அமானுஷ்ய சக்திகளை இயல்பாகவே அறிந்திருப்பவர்களாக இருப்பார்கள். குழந்தைகளிடம் நட்பாக இருப்பது நல்லது. புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். அடிவயிறு, சிறுகுடல், பெருங்குடல் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும்.

குரு பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி காண்பீர்கள். இனிமேல் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள். வெளியூரில் இருப்பவர்களுக்கு இனி மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் பெருகும், பல் பிரச்சனை சரியாகும். படிப்பு வராத குழந்தைகள் இனி நன்றாக படிப்பார்கள். ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், இரவு நேரப் பயணம் மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தேவையில்லாத கேள்விகளை துணையிடம் தவிர்ப்பது நல்லது.

இடமாற்றம், காசு பணம், தொழிலுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. மர்ம உறுப்புகள் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அஷ்டம ஸ்தானத்தில் குரு புதன் வீட்டில் இருப்பதால் சித்தர்களுடைய இடங்களுக்கு வியாழக்கிழமை செல்வது பெரிய மாற்றத்தை கொடுக்கும். வஸ்திர தானம், குழந்தைகளுக்கு தேன் வாங்கிக் கொடுப்பது நல்லது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மாற வேண்டும் என்றால் நாமக்கல் நரசிம்மரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். தாயாருக்கு புடவை சாற்றுவது நல்லது.

தனுசு - வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறீர்கள். குரு பார்வை வருவதால் எதிர்பாராத முன்னேற்றங்கள் நடக்கும். சமுதாயத்தில் முன்னுரிமை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். லக்னத்திற்கு, ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் பொறுமை வரும். புத்திக்கூர்மை அதிகரிக்கும். திடீர் யோகத்தால் வெளியூர் போகும் யோகம் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். வாழ்க்கையின் லட்சியங்களை நோக்கி இனி ஓட ஆரம்பிப்பீர்கள்.

லாப ஸ்தானத்தில் குரு பார்ப்பதால் பெண், மூத்தவர்கள், நண்பர்கள் மூலமாக அதிர்ஷ்டங்கள் உண்டாகும். புரோமோஷன் கிடைக்கும். மூன்றாம் இடத்துக்கு குரு வருவதால் நல்ல பெயர் கிடைக்கும். எண்ணங்கள் அனைத்தும் மாறும். எதையும் சரியாக இனி பார்ப்பீர்கள். குரு பார்வையால் வீட்டில் அனைத்து நல்ல காரியங்களும் நடக்கும். 3 தலைமுறைக்கு உங்களுக்கு இந்த நன்மை நிலைத்து நிற்கும். தெய்வ அனுகிரகம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. துர்கைக்கு எலுமிச்சம்பழத்தை கோர்த்து மாலையிடுவது நல்லது. உங்களுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+