குருப்பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு ஜாக்பாட் யோகம்.. வாயில தான் கண்டம்.. பேச்சில் கவனம் முக்கியம் பிகிலு
குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.
அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலத்தில் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். சைனஸ், காது, மூக்கு, தொண்டை, வாய், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேன் தடவிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.
சிறியதாக கோபப்பட்டால் கூட பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மன அழுத்தம், மரண பயம் எல்லாம் நிவர்த்தி ஆகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பே இல்லை என்று கவலைப்பட்டவர்களுக்கு எல்லாம் அமோகமான காலகட்டம் உண்டாகப் போகிறது. குரு, சனி பகவான் அருளால் அற்புத பலன்கள் கிடைக்கும்.
மீடியா துறையில் நல்ல லைம் லைட்டிற்கு வருவீர்கள். சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த இசையமைப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என எல்லோருக்கும் இனி வளர்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஒரே நாளில் திடீர் அதிர்ஷ்டத்தால் முன்னேறுவீர்கள்.
பழைய கடன்களை அடைத்து முடிப்பது, கடன், கோர்ட், வழக்குகள் அனைத்தும் தீரும். சென்டில்மென்ட் கிடைக்கும். பல் தொடர்பான பிரச்சனைகளை உரிய மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. ரத்தத்தில் தொற்று உள்ளவர்கள், தொற்றுநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம், பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பைல்ஸ், முட்டி வலி, காஸ்மெட்டிக் போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வீர்கள். மனதில் நிம்மதி ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள், நிம்மதியின்மை, மன அழுத்தம், மரண பயம் போன்ற அனைத்தும் நீங்கும். தங்கம் தொடர்பான விஷயங்களில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
புதிதாக திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வெளிநாட்டில், வெளியூரில் இருப்பவர்கள் பூர்வீகத்துக்கு திரும்பக் கூடிய அமைப்பு உண்டாகும். வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டாகும். சட்டப் போராட்டங்கள் நல்லவிதமாக நடக்கும். வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு செல்லும் யோகம் உண்டாகும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications