Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்ம ராசியை வெச்சு செய்யும் ராகு கேது.. காப்பற்றப் போகும் குரு.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

guru-peyarchi-2025-simmam-zodiac-signs-will-receive-lots-of-money-and-wealth-during-this-year

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியாக இருந்தாலும், 11 ஆம் இடத்தில் குரு இருப்பதால் அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். இங்கேயே இருக்கலாமா, வேறு எங்கேயாவது போலாமா என்பது போன்ற பலவிதமான குழப்பங்கள் இருக்கும். ஜென்மத்தில் கேது, 7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் குடும்ப விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சேமிப்பு, பணம் விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வதை தவிர்ப்பது நல்லது. யார் யார் எப்படிப்பட்டவர்கள், என்ன குணாதிசயங்கள் என்பது தெரியவரக் கூடிய காலகட்டமாக இருக்கும்.

பயணங்கள் வெற்றி பெறக்கூடியதாக இருக்கும். சிவ வழிபாடு, கணபதி வழிபாடு வெற்றியைத் தரும். 11 ஆம் இடத்துக்கு குரு வருவதால் அவருடைய பரிபூரண அருளைப் பெறுவீர்கள். ராசியில் கேது வருவதால், 7 ஆம் இடத்தில் ராகு, அஷ்டமத்தில் சனி வருகிறது. பணம் சம்பாதிக்கக் கூடிய வழி, ஞானம் உண்டாகும். தந்தை சொல் மந்திரமாகும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

வீட்டில் மனைவி சொல்வதை கணவரும், கணவர் சொல்வதை மனைவியும் கேட்பது நல்லது. பிள்ளைகளை செலவு செய்து படிக்க வைக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமண யோகம் உண்டாகும். தினந்தோறும் சூரிய பகவானை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

3, 5, 7 க்கு குருவின் பார்வை படுவதால் சவால்களை எதிர்கொள்வதற்கான காலகட்டமாக இருக்கும். அதற்கான பலத்தை குரு கொடுப்பார். எண்ணம், மனதை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நல்லது. மனைவியிடம், மனைவியின் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பணம் சார்ந்த விஷயங்களை சரியாகத் திட்டமிட்டு கையாளுவது நல்லது. எடுத்த காரியங்களில் தடைகள் வந்தாலும் அதில் வெற்றி அடையக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தைகளால் பெருமை கிடைக்கும் காலகட்டம். 7 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும்.

வரும் ஓராண்டு விரையத்தில் வருவதால் சேமிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். லாபத்தில் இருக்கும் குரு பகவான் நல்லதை கொடுக்க முயற்சித்தாலும், ராகு கேதுவால் பாதிப்புகள் வந்து சேரும். புதிதாக திருமணமான தம்பதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. குலதெய்வ வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும்.

சப்தகன்னிமார்களுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வியாழக்கிழமை தோறும் வழிபடுவது மற்ற கிரகங்களில் இருந்து உங்களை காத்து, குருவின் பரிபூரண அருளை கிடைக்கச் செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+