குருப்பெயர்ச்சி: மேஷ ராசியினருக்கு கொட்டிக் கொடுக்கப் போகும் குரு.. முழு பலன்கள் விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

guru-peyarchi-2025-we-will-look-at-the-benefits-of-guru-peyarchi-for-aries-people-and-the-deities-t

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.

குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோசனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோசனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோசனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு 3 ஆம் இடத்திற்கு வருகிறார். ராசிக்கு 7, 9 இல் குரு பார்ப்பதால் திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நண்பர்கள், கூட்டாளிகள் உதவக் கூடிய காலகட்டமாக இருக்கும். படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி அமையக் கூடிய காலகட்டம். கேது 5 ஆம் இடத்துக்குப் போவதால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அச்சம் வேண்டாம்

11 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். சனி பகவான் 12 ஆம் இடமான விரையத்துக்கு வருவதால் அச்சப்படத் தேவையில்லை. 9 ஆம் இடத்தை குரு பகவான் பார்வையிடுவதால் தந்தை வழியில் சுமூகமான உறவுகள் ஏற்படும். பெற்றோரிடம் இருந்து வந்த சண்டைகள் எல்லாம் தீரும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மூத்த சகோதரர் வழியில் உங்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மூத்த சகோதர சகோதரிகளுக்கு திருமண யோகமும், அவர்கள் மூலம் ஆதாயமும் உண்டாகும்.

வெளிநாடு யோகம்

வெளிநாட்டுக்குச் சென்று படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த யோகம் நிச்சயம் கிடைக்கும். படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்கள், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். கடுமையான முயற்சிகள் மூலம் வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது.

ஜெயம்

புதிய கடன் வாங்கி பழைய கடன் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் வாய்ப்பு உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் இருப்பவர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். வாழ்க்கையில் இதுவரை பட்ட அனுபவங்கள் மூலம் ஜெயிக்கும் நுணுக்கத்தை அறிந்து கொள்ளும் காலகட்டமாக இருக்கும். சிறிய சிறிய தோல்விகளுக்குப் பின்னர் பெரிய வெற்றிகளை எல்லாம் உருவாக்கித் தரும் அற்புதமான வாய்ப்புகள் வந்து சேரும்.

வழிபட வேண்டிய தெய்வம்

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் வழிபாடு செய்வது மேஷ ராசிக்காரர்களுக்கு அருமையான பலன்களைத் தரும். மூன்று குளத்தில் கை, கால்களை கழுவிவிட்டு நல்லெண்ணெய், விபூதி, குங்குமம் கொடுத்து வழிபாடு செய்து வாங்கிக் கொள்வது நல்லது. வயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

தினந்தோறும் உடற்பயிற்சி செல்வது அமோகமான பலன்களைத் தரும். காரியசித்தி மாலை மந்திரத்தை கேட்பது பெரிய அளவுக்கு அனுகூலத்தை தரும். அனைத்து விதமான நல்ல காரியங்களும் நடக்கும். திருமணம், மறுமணம், காதல் கைகூடுவது, பிரிந்தவர்கள் சேர்வது, நண்பர்களுக்குள் இருந்த பாதிப்பு நிவர்த்தியாகும்.

பண வரவு அதிகரிக்கும்

பெரிய வெற்றியை உண்டாக்கும். பண வரவு உண்டாகும். அதிகமாக வண்டி வாங்குவது, நகை வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். தொழிலே இல்லாதவர்களுக்கு தொழில் அமைப்பு உண்டாகும். கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொடங்குவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது இருப்பதால் அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாட்டை கேட்பது படிப்பது நல்லது.

11 ஆம் இடத்தில் ராகு இருப்பது விசேஷம். வெளிநாட்டில் தொழில் செய்வது, வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தூக்கமின்மை, மன அழுத்தங்கள் நீங்கும். 3 ஆம் இடத்தில் வரும் குரு தைரியத்தைக் கொடுப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+