குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. பேச்சு, பணத்தில் மிக மிக கவனம்
குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.
குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோர்சனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோர்சனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோர்சனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள்
கடக ராசிக்காரர்களுக்கு 12 ஆம் இடத்தில் குரு பகவானும், 2 ஆம் இடத்தில் கேது பகவானும் வருகிறார். இரண்டு பக்கத்திலும் கடக ராசியினர் சிக்கியிருக்கிறார். எதனை முதலில் செய்வது, எதை இரண்டாவது செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் இருந்திருப்பீர்கள். இனி எந்த சமயத்தில் எதை செய்தால் வெற்றி பெறலாம் என்ற நுணுக்கத்தை கற்றுக் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.
விரைய செலவுகள்
வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு வரக்கூடிய வாய்ப்புள்ளது. இடம் பொருள் ஏவல் தெரிந்து பேசுவது அற்புதமான பலன்களைத் தரும். 12 ஆம் ஸ்தானத்தில் குரு வருவதால் நிறைய விரைய செலவுகள் ஏற்படுத்திக் கொடுக்கும். பயண செலவுகள், விரைய செலவுகள், வெளிநாட்டுக்குச் சென்றதால் செலவுகள் என அபரிமிதமான செலவுகள் உண்டாகியிருக்கும். விவசாயத்தில் இருப்பவர்கள் தெரிந்த விஷயங்களை மட்டும் செய்வது நல்லது.
பேச்சில் கவனம்
நினைத்தது எதுவுமே நடக்காத காலகட்டமாக இதுவரை இருந்திருக்கும். கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பேச்சில் தேன் தடவிய வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. 4 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. மண், மனை, வண்டி, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். 6 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நோய் நிவர்த்தியாகும் காலகட்டமாக இருக்கும்.
பண விஷயத்தில் கவனம்
வெற்றி ஸ்தானத்தை 6 ஆம் இடம் குறிப்பதால், எடுத்த காரியங்களில் வெற்றிகளைப் பெறக்கூடிய யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குபவர்கள் அகலகால் வைக்காமல் இருப்பது நல்லது. தந்தையின் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது.
ஆலங்குடி குரு ஸ்தலத்தில் குங்குமம், விபூதி கொடுத்து வழிபட்டு அதனை தினமும் பயன்படுத்துவது நல்லது. கடகத்தில் குரு உச்சம் பெறுவதால் விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் ஏமாறும் வாய்ப்புண்டு. பழைய கடன்களை தீர்த்து, புதிய கடன்களை அமைப்பதற்கான யோகம் உண்டாகும். முதலீடுகளுக்கு எந்தவிதமான குறையும் இருக்காது.
ஆடி மாதத்தில் அதிர்ஷ்டம்
கடகத்துக்கு மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். சிறிய சிறிய விஷயத்துக்கெல்லாம் கோபப்படும் நேரமாக இருக்கும். மரண பயம் நீங்கும். மன அழுத்தம் தீரும். தெய்வ காரியங்களைச் செய்து மகிழ்வார்கள். பெற்றோர், பெரியோர் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சனி 9 இல் இருப்பதால் ஆடி மாதத்தில் இருந்து நன்மைகள் ஏற்படும்.
முதுகுதண்டுவடம் முதல் கால் பாதம் வரைக்கும் கவனமாக இருப்பது நல்லது. தியானம், யோகா செய்வது அமோகமான பலன்களைத் தரும். ஆன்மிக குருவை வைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் குணமாவதற்கான வாய்ப்புண்டு.












Click it and Unblock the Notifications