குருப்பெயர்ச்சி: அடித்து ஆடப்போகும் சிம்ம ராசி.. வெச்ச குறி தப்பாது.. பேச்சில் தான் ஆபத்தே
குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.
குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோர்சனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோர்சனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோர்சனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு 11 ஆம் இடத்தில் வருவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றன. அஷ்டமத்தியில் சனி இருப்பதால் அச்சமே வேண்டாம். குரு பகவானின் அனுகிரகத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. கேது ஜென்மத்துக்கு வருவதால் செய்யும் செயல்களை யோசித்து செய்வது நல்லது. வாகனம் ஓட்டும்போது வித்தைகளை காட்டுவதை தவிர்ப்பது நல்லது.
குழந்தை பாக்கியம்
3 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் இளைய சகோதரர்கள், பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 5 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். 7 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் அனைத்தும் நடத்தேறும். குருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
ஆசைகள் நிறைவேறும்
ராசிக்கு 11 ஆம் இடத்தில் குரு வருவதால் உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கேது பகவான் இருந்தாலும் குரு பகவான் 5, 3, 7 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு செல்லும் யோகத்தை உண்டாக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உங்களுடைய திறமைகள் அனைத்தும் வெளியில் தெரியக்கூடிய நேரமாக இருக்கும்.
முன்னேற்றம்
நீண்டநாட்களாக அரசியலுக்குச் செல்ல வேண்டும் நினைப்பவர்களுக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். புதிய பொறுப்புகள், பதவிகள் வந்து சேரும். ஆன்மீகத்தில் நல்ல பெயர், புகழ் உண்டாகும். புதிய நண்பர்கள், தொடர்புகள் உண்டாகும் நேரம். பெண்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புத்திர பாக்கிய யோகங்கள் உண்டாகும். நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம், மறுமணம் உண்டாகும்.
உத்தியோகத்தில் கவனம்
திருநள்ளாறுக்குச் செல்வது, நளதீர்த்தத்தில் நீராடுவது அற்புதமான பலன்களைத் தரும். தொழில் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. அஷ்டமசனி இருப்பதால் உடற்பயிற்சி தேவை. மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பயணங்கள், சுற்றுலாவை மேற்கொள்ளாமல் உத்தியோகத்தில் கவனமாக இருப்பது நல்லது.
காதல் கைகூடும்
கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். காதல் அமைப்பு அற்புதமாக இருக்கும். துணையை நோண்டிக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஜென்மத்தில் கேது இருப்பதால் தேவையில்லாத மன அழுத்தம் உண்டாகும். ரத்த அழுத்தம், கொழுப்பு, ஹார்மோன் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை.
குடும்பத்தில் நிம்மதி
கேது ஜென்மத்தில் இருப்பதால் பிள்ளையார் மந்திரங்களை சொல்வது நல்லது. தொழில் ரீதியாக 11 இல் குரு வருவதால் பிள்ளைகளின் நீண்டநாள் பிரச்சனைகள் சரியாகும். தைரியம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு பெற்றோர் பெரிய அளவுக்கு உதவிகளை செய்வீர்கள். திடீரென பெயர், புகழைப் பெறுவீர்கள்.
மற்றவர்களின் பேச்சைக் கேட்பது, நண்பர்களின் சொல்லைக் கேட்டு துணை அல்லது காதல் அமைப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வார்த்தைகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications