குருப்பெயர்ச்சி: விருச்சிகம் ராசி அடிச்சு கேட்டாலும் இதை மட்டும் பண்ணிடாதீங்க
குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையாக பொருந்திய கிரகம்.

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.
குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோசனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோசனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோசனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இடத்தில் குரு பகவான் எட்டாம் இடத்தில் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து 2, 4, 12 இடங்களை குரு பகவான் பார்க்கிறார். இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தை, நான்காம் இடமான மாத்ரு, சுக ஸ்தானத்தையும், 12 ஆம் இடமான அயன, சயன, போகத்தை பார்க்கிறார். சுப விரய செலவுகள் அதிகரிக்கும்.
சொத்து
வீடு, மனை, வண்டி, வாகனம் உள்ளிட்டவை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய கடன்கள் உருவாகும். ராசிக்கு பத்தாம் இடத்தில் கேது பகவான் உள்ளார். தொழில் மற்றும் இட மாற்றம் நிச்சயம் இருக்கும். தொழிலில் நீண்ட காலமாக திட்டமிட்ட சில புனரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். உங்கள் எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.
சுப காரியம்
குரு பகவான் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் சற்று தெளிவு கிடைக்கும். சனி பகவான் ஐந்தாம் இடத்தில் உள்ளார். இதனால் குழந்தைகளின் கல்வி, வேலை தொடர்பாக வெளிநாடு பயணம் மேற்கொள்வார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மரியாதை
சமூகத்தில் பெயர், புகழ், மரியாதை அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கும். சகோதர வழி உறவில் இருந்த பகை நீங்கும். பெற்றோரால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அடுத்தடுத்து நல்ல காரியங்களால் மகிழ்ச்சி உருவாகும். உத்யோகம், தொழில் நன்றாக இருக்கும். பண வரவு சீராக இருக்கும்.
கவனம்
குழப்பங்கள் அதிகரிக்கும். பண விவகாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கலை தவிர்க்க வேண்டும். யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். முதலீடு சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கை அவசியம். வார்த்தைகளில் சற்று கவனம் வேண்டும். குரு அஷ்டமத்தில் இருப்பதால் மரணம் தொடர்பான பயம் அவ்வப்போது வந்து செல்லும்.
பரிகாரம்
ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். பெண்களாக இருந்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை. அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும். பதற்றம் மற்றும் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிலும் ரிஸ்க் எடுக்காமல் அமைதியாக இருப்பது நன்மை. யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வைத்தீஸ்வரன், பட்டீஸ்வரர் துர்க்கை வழிபாடு மன நிம்மதியை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications