குருப்பெயர்ச்சி: மீன ராசியை வெச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. அமைதியோ அமைதினு இருப்பது நல்லது

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

Guru Peyarchi lucky zodiac signs

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மீன ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 4 ஆம் இடத்துக்குப் போகிறார். ராசியிலேயே சனி பகவான், 12 இல் ராகு, 6 இல் கேது என அசுப கிரகங்களின் தாக்கம் உங்களுக்கு அதிகளவில் இருக்கும். நிறைய பகையை சம்பாதிக்கும் காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் கூட்டுத் தொழில் முயற்சியில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டுக் கொள்வது நல்து. உங்களுடைய ஐடியாவை மேலதிகாரிகளிடம் சொல்வது சாதக பலனை தராது. மீன ராசிக்கு பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் அடுத்த ஒரு வருட காலம் தவவாழ்க்கை வாழ்வது நல்லது. அனுதினமும் மந்திர உபதேசத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

6 இல் இருக்கும் கேது அற்புத பலன்களைத் தரப் போகிறார். சத்ரு ஜெயம் உண்டாகும். காலையில் எழுந்தவுடன், கோயிலுக்குச் செல்வது நல்லது. அல்லது வீட்டிலேயே வழிபாடு செய்வது நல்லது. சுத்தபத்தம் இல்லாமல் இருப்பது போன்றவை கெடு பலன்களைத் தரும். விநாயகப் பெருமானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

சனி உங்களுடைய எண்ணத்தைப் பிடித்துக் கொள்வதால், உங்களுக்கு எதிரான விஷயங்களை நீங்களே செய்வீர்கள். 8, 10, 12 ஆம் வீடுகளைப் பார்க்கும் குரு பகவான் சுக ஸ்தானத்தில் அமருவதால் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். மே 14க்குப் பிறகு சாதகமான பலன்கள், திடீர் அதிர்ஷ்டம், முன்னேற்றம் உண்டாகும்.

எளிமையாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். எடுத்த காரியங்களில் பொறுமையை, நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. முருகப் பெருமான் வழிபாடு அருமையான பலன்களைத் தரும். திருச்செந்தூரில் இருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமியை வேண்டி வருவது ஏழரை சனியில் வரும் பாதிப்புகளை நீக்கி பலன்களைத் தரும். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது நல்லது.

கண்ணிருந்தும் பார்க்காமல் இருப்பது, காதிருந்தும் கேட்காமல் இருப்பது, வாயிருந்தும் பேசாமல் இருப்பது என்ற நிலையைக் கடைப்பிடிப்பது நல்லது. வீடு கட்டியவர்கள் பெரும் சுமையை அனுபவிப்பார்கள். அதேபோல திருமணத்துக்காக நிறைய பணத்தை செலவு செய்திருப்பீர்கள். எவ்வளவு விஷயங்கள் வந்தாலும் அதனை சமாளிப்பீர்கள். சனி பகவான் உங்களுக்கு நிதானத்தைக் கொடுப்பார்.

மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மற்றபடி குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குருப்பெயர்ச்சியில் கஷ்டங்கள் இருந்தாலும் சமாளிக்கக்கூடிய சூழல் ஏற்படும். 4 ஆம் இடத்தின் கேந்திர ஸ்தானம் வெற்றியைத் தரும். மிகப்பெரிய பலத்தைக்கொடுக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+