2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா?
Guru Peyarchi 2026: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

குருவுக்கு ஸ்தான பலத்தைவிட பார்வை பலம் மிகுந்த விசேஷமானது. விருச்சிகம், மகரம், மீன ராசியை பார்க்கும் குரு பகவானால் சிம்ம ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். திருக்கொள்ளிக்காடு சென்று சுவாமி தரிசனம் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். அஷ்டமத்தில் இருக்கும் சனியின் வீரியத்தை, கோபத்தைக் குறைக்கக்கூடிய குருப்பெயர்ச்சியாகும் இது. 12 ஆம் பார்வையாக வரும் குரு பகவான் உச்சமாக 8 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சனியை 9 ஆம் பார்வையாக பார்ப்பதால் நிறைய நல்லவை நடக்கும் காலகட்டம்.
கடன்கள் தீரும்
விலை உயர்ந்த பொருட்கள் விஷயத்திலும், முதலீடுகள் விஷயத்திலும் அதீத கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவுகள் சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் தேவை. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த இழுபறியான சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும்.
முயற்சிகளில் வெற்றி
முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். துணை விஷயத்தில், காதல் அமைப்பில் அந்நியோன்யமாக இருப்பது நன்மை பயக்கும். 36 வயதைக் கடந்த சிம்ம ராசியினர் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சாதாரண வயிறு பாதிப்புகள் கூட நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. உரிய மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வெளிநாடு வாய்ப்பு
குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவதால் மறைமுகமான நன்மைகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த கவலைகள் குறைந்து, புதிய நம்பிக்கை உருவாகும். வெளிநாட்டு வாய்ப்புகள், புதிய முயற்சிகள், ஆன்மீக ஈடுபாடுகள் போன்றவை அதிகரிக்கலாம். சிலருக்கு திடீர் பணவரவு அல்லது எதிர்பாராத உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முன்னேற்றம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆரம்பத்தில் சற்று தாமதங்கள் இருந்தாலும், பின்னர் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். உடல்நலத்தில் கவனம் தேவை, குறிப்பாக தூக்கம் மற்றும் மனஅழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
வழிபாடு
கோவில் தரிசனம், குரு பகவானுக்கு வியாழக்கிழமை வழிபாடு போன்றவை இந்த காலத்தில் மேலும் நல்ல பலன்களை தரும். மொத்தத்தில், சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கையை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய முக்கியமான காலமாக இருக்கும். 6 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு பெரிய அளவுக்கு பலத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். மன அழுத்தங்கள் பரிபூரணமாக நீங்கும். தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். விலையுயர்ந்த பொருள்கள் விஷயத்தில் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications