குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குரு உச்சம்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் அற்புதமான காலகட்டம்
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், கடக ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது கடக ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம் (Kadagam Rasi Palan)
கடகம் ராசியினருக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு அற்புதமான காலகட்டமாக இருக்கும். குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த கஷ்டங்கள், பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்.
பணம் வரும்
பிள்ளைகள் சொல்படி கேட்கும் நிலை ஏற்படும். வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும். தொழிலில் ஏற்றம் ஏற்படும். நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். இதுநாள் இருந்து வந்த பணத் தட்டுப்பாடு நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். உங்களை அவமானப்படுத்தியவர்கள் இனி உயர்த்திப் பேசுவார்கள்.
திருமண யோகம்
திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமண யோகம் ஏற்படும். திருமணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மனதிற்குப் பிடித்த மாதிரி இரண்டாம் கல்யாணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த மாதிரி குழந்தை பிறக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
பதவி உயர்வு
சொந்த தொழில் செய்பவர்கள் பிரகாசிக்கும் காலகட்டமாக இருக்கும். வேலையில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும். உயர்கல்வி யோகம் உண்டு. வெளிநாட்டு வாய்ப்புகள், வெளிநாட்டில் கல்வி பயிலும் தன்மை உண்டாகும். பிரிந்த நண்பர்கள் மீண்டும் வந்து சேரும் யோகம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications