Guru Peyarchi 2026: கடக ராசிக்கு பிரச்சனைகள் எல்லாம் தீரப்போகுது.. சொல்லி அடிக்கும் நேரம்

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. வருடாந்திர கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

Guru Peyarchi 2026

ஜூன் மாதம் 2 ஆம் தேதி கடக வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான் மூன்று மாதம் கழித்து சிம்ம வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் கடகத்துக்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும் முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்த குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.

இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப்போகும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசியினருக்கு இதுவரை 11 ஆம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் ராசியிலேயே உச்சமாகி இருக்கிறார். அற்புதமான பலன்கள் கிடைக்கும். கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். சனி என்றாலே பயந்து போயிருந்த உங்களுக்கு நல்ல அமைப்புகள் உண்டாகும். இழந்த மதிப்பு, கெளரம் திரும்பி கிடைக்கும். வீண் பழிகள் நீங்கி உங்கள் வேலையில் நல்ல அங்கீகாரம் ஏற்படும்.

குரு பார்வை

கெளரவம், தலைநிமிர்ந்த அமைப்புகள் ஏற்படக்கூடிய யோகம் உண்டாகும். ராசியிலேயே குரு பகவான் உச்சமாக இருந்து 5, 7, 9 ஆம் இடங்களைப் பார்ப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். குரு ராசியில் அமர்வதால் இழந்த கெளரவம் கிடைக்கும். தைரியம் ஏற்படும். அந்தஸ்து ஏற்படும் அமைப்பு உள்ளது. 5 ஆம் இடத்தில் குருவின் பார்வை விழுவதால் பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த வருத்தங்கள் விலகும்.

திருமண யோகம்

திருமணத்திற்கு, தொழிலுக்கு, வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டிற்கு வருவது போன்ற விஷயங்களில் அவர்கள் சம்மதிக்கும் அமைப்பு உண்டாகும். உங்கள் பேச்சை குழந்தைகள் கேட்பார்கள். கூட்டுத் தொழில், நட்புகள், உறவுகள் சார்ந்த விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரிந்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் தொழிலை தொடர்வதற்கான அமைப்பு ஏற்படும்.

வழிபாடு

நண்பரோடு சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யும் யோகம் உண்டாகும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். குலதெய்வ கோயிலுக்கு நல்ல காரியங்கள் செய்வது, இஷ்ட தெய்வ கோயில்களுக்குச் செய்வது போன்ற நன்மைகள், தெய்வ அனுகூலம் கிடைக்கும் அமைப்பு ஏற்படும். தவம், தியானம் போன்ற பயிற்சி அமைப்புகளில் சேரக்கூடிய யோகம் உண்டு.

விடுதலை

சிலருக்கு சித்தர் தரிசனம், பெரியவரின் ஆசிர்வாதம் போன்றவை உண்டாகும். காசி, கயா, கங்கா போன்ற இடங்களுக்குச் செல்லக்கூடிய அமைப்பு ஏற்படும். பெண்கள் சார்ந்த விஷயங்களில் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுதலை பெறக்கூடிய நல்ல யோகமான மாற்றங்கள் நடக்கும். குழந்தைகள் விஷயத்தில் இருந்து வந்த வருத்தங்கள் நீங்கும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+