Guru Peyarchi 2026: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்..ஜூன் மாதத்தில் மாற்றம் உறுதி
Guru Peyarchi 2026: ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. வருடாந்திர கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஜூன் மாதம் 2 ஆம் தேதி கடக வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான் மூன்று மாதம் கழித்து சிம்ம வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் கடகத்துக்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும் முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்த குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.
இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப்போகும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசியினருக்கு இதுவரைக்கும் 2 ஆம் இடத்தில் வலுவாக இருந்த குரு பகவான் 3 ஆம் இடத்திற்கு மாறியிருக்கிறார். 7, 11, 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகக்கூடிய அமைப்பு ஏற்படும். திருமணம் உறுதி செய்வது, நிச்சயதார்த்தம் ஆகும் யோகம் உண்டு. முதல் திருமணம் தோல்வி அடைந்து விவாகரத்துக்காக காத்திருப்பவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
தொழில் அமையும்
இரண்டாவது திருமணம் செய்யக்கூடிய யோகம் உண்டு. நண்பர்கள் மூலமாக லாபம் ஏற்படும். அந்நிய இன, மத, மொழி பேசும் நபர்கள் மூலமாக கூட்டுத் தொழில்கள் அமையும். அந்த கூட்டுத் தொழில்களின் மூலமாக நல்ல லாபங்கள் கிடைக்கும். அப்பாவைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த கவலைகள் பரிபூரணமாக நீங்கும். வேலையை விட்டுவிட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். அதன் மூலம் நிறைய நல்லவைகள் நடக்கும்.
சொத்து பிரச்சனை நீங்கும்
அப்பா தாத்தா சொத்துகளை அனுபவிக்கும் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த வழக்குகள் நீங்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மீண்டும் பூர்வீக இடத்தில் செட்டிலாகும் யோகம் உண்டு. வியாபாரிகள் அனைவருக்கும் நல்ல லாபங்கள் கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசாங்க அனுமதிகள் கிடைக்கும். குடும்பம் மேலோங்கி ஒற்றுமை ஏற்படும்.
குடும்பம்
மாமனார் மருமகள், மருமகன் சண்டை எல்லாம் நீங்கும். மீண்டும் குடும்பத்துடன் ஒன்று சேரக்கூடிய அமைப்பு. கூட்டு முயற்சிகள் பலிக்கும் காலகட்டமாக இருககும். ரிஷப ராசியினருக்கு பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது. 3 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் நல்ல அனுபவங்களைக் கொடுக்கும். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு முயற்சிகள் மேம்படும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications