குருப்பெயர்ச்சி: அஷ்டம சனியிடம் இருந்து தப்பித்து குருவிடம் சிக்கும் 'கடகம்'.. வச்சு செய்ய போகுது

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Guru peyarchi Kadagam

கடகம்: கடக ராசி அல்லது லக்னத்தில் பிறக்கக் கூடியவர்களுக்கு குருவானவர் லாப ஸ்தானம் 11 ஆம் இடத்தில் அமர்ந்து பணத்தை கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். சுக்கிரன் வீட்டில் குரு உட்கார்ந்தால் எப்படி வேண்டும் என்றாலும் பணம் வரும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் வரும். தற்போது 12 ஆம் இடத்தில் விரைய ஸ்தானத்தில் உட்காரப் போவதால் இடத்தை மாற்றுவது என்று அர்த்தம்.

12 ஆம் இடம் என்றால் செய்யும் வேலை, தொழிலில் மாற்றம் ஏற்படும். விரைய ஸ்தானம் 12 ஆம் இடத்துக்குச் சென்று காலபுருசருக்கு மூன்றாம் வீடு என்றால் நிறைய பேருக்கு மொபைல், லேப்டாப், கம்யூனிகேஷன், வங்கிக் கணக்கு சார்ந்தது. ஆன்லைன் மூலமாக பணத்தை ஏமாறும் சூழல் ஏற்படும். விரைய ஸ்தானத்தில் குரு உட்கார்ந்திருப்பதால் எல்லா விஷயங்களையும் இழப்பது போலவும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இளைய சகோதரன், சகோதரிகளுக்காக பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

உங்களுடைய கால், கணுக்கால் நரம்பு போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குரு 12 ஆம் இடம் எனும் விரைய ஸ்தானத்தில் உட்காருவதால் ஊர் மாறும், இடம் மாறும், வேலை மாறும், வெளியூரில் செட்டிலாவதற்கான யோகம் ஏற்படும். சுப செலவுகள் அதிக அளவில் ஏற்படும். துலாம் ராசியின் மேல் குரு பார்வை படுவதால் மிகப்பெரிய வெற்றி, மேன்மை உண்டாகும். வீடு கட்டக்கூடிய பிராப்தம் உண்டாகும்.

வாழ்க்கை துணையுடைய பெயரில் வீடு வாங்கும், வீடு கட்டும் யோகம் உண்டாகும். வாழ்க்கை துணை மூலமாக லாபங்கள் வரும். 6 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் கர்ம கடன்கள் எல்லாம் தீரும் யோகம் உண்டாகும். நோய் நொடி சம்பந்தப்பட்ட பாதிப்புகள் நிவர்த்தியாகும். 12 ஆம் இடத்தில் குரு அமருவதால் கண்டிப்பாக சில பாதிப்புகளைத் தருவார். அதிக வட்டிக்கு கடன் வாங்குவது, பணத்தை லாக் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுய ஜாதகங்களில் தசாபுத்திகள் நன்றாக இருந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இருக்கும். அஷ்டமத்தில் ராகு, அதன் மேல் குரு பார்வை இருப்பதால் சண்டை போட்டு பிரச்சனை செய்து ஒரு விஷயத்தை செய்து முடிப்பீர்கள். அது சாதகமாக முடியும். அஷ்டம சனியில் இருந்து விடுதலை ஆனாலும் குரு அமரும் இடம் அந்தளவுக்கு சரியில்லை. ஆனால், அடுத்த ஆண்டு உங்களுக்கு பொன்னான காலமாக இருக்கும்.

ராசி லக்னத்தில் குரு அடுத்த ஆண்டு உச்சமடைவதால் நல்ல யோகத்தைப் பெறுவீர்கள். சந்தோஷத்தின் அடிப்படையில் 100க்கு 65 சதவீதம் நன்றாக இருக்கும். பொருளாதார ரீதியில் 100க்கு 80 சதவீதம் அருமையாக உள்ளது

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம்:- பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரையும் நம்பி பணத்தை கொடுக்க கூடாது. ஆன்லைன் மோசடியில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- சந்நியாசிகள், மகான்கள் இடத்திற்குப் போவது நல்லது. ராகவேந்திரர் மடம், மந்திராலயம் போவது நல்ல பலன்களைத் தரும். வியாழக்கிழமை தோறும் மதியம் மட்டும் விரதம் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+