அஷ்ட ஐஸ்வர்யங்களை அனுபவிக்கப் போகும் மிதுனம்.. குருவின் பார்வையால் அதிர்ஷ்டம் கொட்டும்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் குரு அமர்ந்து தேவையில்லாத செலவைக் கொடுத்துக் கொடுத்திருப்பார். குழந்தைகள் தொடர்பான பல்வேறு கவலைகளைக் கொடுத்திருப்பார். சில பேருக்கு புத்திர சோகம் ஏற்பட்டிருக்கும். குழந்தைகள் தொடர்பான சிந்தனைகள், அவர்களால் அவமானம் ஏற்படுவது, செலவு ஏற்படுவது, நடத்தை சரியில்லாமல் இருப்பது போன்ற பல்வேறு சிக்கலைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். தேவைக்கு அதிகமாக ஆடம்பர செலவுகளை செய்யக்கூடிய தன்மைகளில் தள்ளப்பட்டிருப்பீர்கள்
அந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முடிவு வருகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலமாக இருக்கும். உங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து நல்ல காரியங்களும் உங்கள் தலைமையில் நடக்கும். வெளிநாட்டில் வேலை தேடி கொண்டிருப்பவர்கள் அரபு நாட்டுக்குச் செல்லும் யோகம் உண்டு. குடும்பத்தில் அந்நியோன்யம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
புதன் வீட்டில் குரு வருவதால் கழிவுகள் போகக்கூடிய பாதைகள், ரத்த நாளங்கள், கழுத்துப் பகுதியில் வலி வேதனைகள் உண்டாகும். நரம்புப் பிடிப்பு, வெர்டிகோ போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அனைத்துவிதமான நன்மைகளும் கிடைத்தாலும் ஆரோக்கியத்தில் மாற்றி மாற்றி தொந்தரவு வரும். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலன்களைத் தரும். அதிகப்படியான நெய் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது பலவிதமான வெற்றிகளைத் தரும்.
பார்வை பலத்தின் மூலமாக துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் குரு பார்வை இருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அந்நியோன்யம் பிறக்கும். கல்யாணம் நடக்கும். தொழில் பிராப்தம் உண்டாகும். உங்களுடைய குழந்தைகளுக்கு திருமணம், உங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். சிக்கல்களாக நினைத்த காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். நிறைய பேருக்கு கடனை அடைக்கும் யோகம் உண்டாகும்.
சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். அஷ்ட ஐஸ்வர்ய பிரதாத எனும் ஐஸ்வர்யங்கள் உண்டாகும். லட்சுமி குபேரன் வழிபாடு செய்வது மற்றும் தீபாவளிக்கு ஒருநாள் முன்பு செய்யும் பூஜையை வாரவாரம் வெள்ளிக்கிழமை செய்து வந்தால் அனைத்து விதமான செல்வங்களும், தனமும் கிடைக்கும்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம்:- ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- லட்சுமி குபேரனுக்கான ஹோமம், வழிபாடு செய்வது நல்லது. சந்தோஷத்தின் ரீதியாக பார்த்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு 85 சதவீதம் நன்றாக இருக்கும். பொருளாதார ரீதியில் 100 சதவீதமான நன்மைகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications