மேஷ ராசிக்கு ஜாக்பாட் யோகம்.. பிரச்சனைகள் எல்லாம் ஓவர்.. எடுத்த காரியங்களில் ஜெயம்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மேஷம் ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றும். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 3 ஆம் இடத்துக்கு குரு போகிறார். 3 ஆம் இடம் என்பது தொண்டை, மூக்கு, கழுத்து பகுதி. உபஜெய ஸ்தானம் என்பதால் எண்ணங்கள் நல்லதாக மாறும். ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் பாசிட்டிவ், நெகட்டிவை ஆய்வு செய்து திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். எண்ணங்கள் மிகத் தெளிவாகும்.
மேஷ ராசியினருக்கு திருமண யோகம் கைகூடும். சுய தொழில் செய்யக்கூடிய பிராப்தம் உண்டாகும். வாழ்க்கை துணையை பார்ட்னராக மாற்றி இருவரும் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்துப் பிரச்சனை, முன்னோர்கள் பிரச்சனை எல்லாம் தீரும். குடும்ப வழக்க கோயில்களில் கிடைக்கக்கூடிய மரியாதைகள் அனைத்தும் கிடைக்கும். நீங்கள் நின்று கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
குரு பார்வை
பாக்கிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மிகப்பெரிய ஏற்றத்தை கொடுக்கும். வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு வெளிநாட்டு யோகங்கள கைகூடும். குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கக்கூடிய யோகம் உண்டாகும். மந்த புத்தி இருப்பவர்களுக்கு கூட படிப்பு ஏறும் நிலை உண்டாகும். படிப்பில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
பதவி உயர்வு
வேலை இல்லாமல் இருந்து வந்த நிலை மாறும். இரண்டாவது வருமானம் கைகூடும். குரு பார்வை ராகு மீது விழுவதால் பங்காளாக்கள், மிகப்பெரிய கார் போன்றவற்றுக்குச் செல்வீர்கள். குழந்தைகள் பெரிய விஷயங்களை சாதிப்பார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிறு சிறு தொண்டை பிரச்சனை கழுத்து வலி வரும். ஆனால் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்.
பெண்கள்
பெண்களுடைய திறமைகள் தனியாக ஆரம்பிக்கும். உங்களுடைய திறமைகள் வெளியில் தெரியவரும். வியாபாரிகளுக்கு இறக்குமதி, ஏற்றுமதி அருமையாக நடக்கும். ஸ்டாக்குகளில் முதலீடு செய்வது நல்லது. டெலிகாம் துறைகளில் முதலீடு செய்வது, கோல்டு பாண்டுகளில் முதலீடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
பரிகாரம், வழிபாடு
குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குருவாயூர் சென்று வருவது அமோகமான ஏற்றத்தை தரும். குருவாயூரில் நெய் தானமாக கொடுப்பது நல்லது.
மாணவர்கள்
மாணவர்களுக்கு ஆடிட்டிங் துறை நன்மை பயக்கும். வணிகவியல், கணக்குப் பதிவியல் துறைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
மதிப்பெண்கள்
மகிழ்ச்சி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் 90 சதவீத நன்மைகளைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications