குரு பெயர்ச்சி... லாப குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகுதாம்
குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். குருவின் பார்வைகள் மற்றும் பயணத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகுதாம்
மதுரை: லாப ஸ்தானத்தில் குரு பயணம் செய்தால் கோடீஸ்வர யோகத்தை தேடித் தருவார். அப்படி ஒரு யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வரப்போகிறது. குரு பகவான் கோச்சார ரீதியாக ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார்.
குரு பகவான் இப்போது மீன ராசியில் பயணம் செய்கிறார். குரு பகவானின் சொந்த வீடு மீன ராசி. தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரும் குரு பகவான் அனைத்து ராசியினருக்கும் நன்மைகளையே செய்வார். சிலருக்கு ஜாதகத்தில் உள்ள தசாபுத்திப்படி சோதனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு லாப குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
கால புருஷ தத்துவப்படி 11ஆம் இடம் என்பது லாப ஸ்தானம். வருமானம், ஆதாயம் கிடைக்கும். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குருபகவான் 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். சொத்துக்கள் விற்பனை மூலம் லாபம் வரும். பூர்வீக சொத்துக்கள் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலைச்சுமை நீங்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். இதுநாள் வரை காத்திருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.

தொழிலில் லாபம் அதிகரிக்கும்
செய்யும் தொழிலில் இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில், இதுவரையிலும் செய்ய முடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். கடையை கொஞ்சம் விரிவுபடுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள்.

தைரியம், தன்னம்பிக்கை கூடும்
விரும்பி வேலை கிடைக்கும், வேலையில் அதிகாரம் மிக்க பதவி தேடி வரும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு தேடி வரும், தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களின் உதவியும் ஆதாயமும் கிடைக்கும். இளைய சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.

குழந்தைகளுக்கு சுப காரியம்
ஐந்தாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமணமாகி புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் சுப காரியம் நடைபெறும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும் மகனுக்கோ, மகளுக்கோ நல்ல வரன் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். தனித்திறமை வெளிப்படும். ஆசைகள் விருப்பங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

காதல், திருமணம் கை கூடும்
குரு பலம் வந்து விட்டது. புதிய வாய்ப்புகள் தேடி வந்து வாசற்கதவை தட்டப்போகிறது. திருமணம் கை கூடி வரும். நல்ல வரன் அமையும். சுப காரியங்கள் வீட்டில் நடைபெறப்போகிறது. குரு பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும். முயற்சிகள் கைகூடி வரும். நெருக்கம் கைகூடி வரும். புதிதாக காதல் பிறக்கும். காதலிப்பவர்களுக்கு குடும்பத்தில் உறவினர்களின் ஒத்துழைப்புடன் கல்யாணம் கை கூடி வரும். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் தரக்கூடிய குருப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications