குரு பெயர்ச்சி பலன் 2023: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷத்திற்கு வரும் குரு..குபேரனாகும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் ஏப்ரல் 21ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளை செய்வார். துலாம் முதல் மீனம் வரை 6 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடைபெறப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் ஓராண்டிற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இந்த முறை ராகு உடன் ஏழு மாதங்கள் பயணம் செய்வார். ராகுவும் குருவும் இணைந்து சிலருக்கு திடீர் ராஜயோகத்தை தருவார்கள். குபேர யோகமும் பலருக்கு தேடி வரும்.

'குருபார்க்க கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கும். இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும் என்பதால் அதிகம் அச்சப்படத் தேவையில்லை.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்து 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். பணவரவு அதிகரிக்கும். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. உணவு விசயத்தில் கவனமாக இருந்தால் வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே... குருபகவான் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம். அர்த்தாஷ்டம சனியால் நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும். பொருளாதார உயர்வு இருக்கும், தீராத பிணிகளும் தீரும் காலம் வந்து விட்டது. குருவின் அருளால் கோடீஸ்வர யோகமும் குபேர யோகமும் தேடி வரப்போகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே.. குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் இருந்து 6ஆம் இடத்திற்கு சஞ்சரிக்கிறார். ஆறாமிடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் தாமதப்படும். இந்த ஆண்டு உங்களுக்கு பணம் அதிகமாக வந்தாலும் கூட சுப விரைய செலவுகள் ஏற்படும். வியாழக்கிழமை மஞ்சள் ஆடை அணிந்து விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே... குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். குரு தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உங்களுக்கு குரு பார்வையும் பலனும் வந்து விட்டது. திருமணம் கைகூடி வரும். நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இருந்த குருபகவான் சுக ஸ்தானமான 4வது வீட்டில் அமரப்போகிறார். அலுவலகத்தில் செய்யும் வேலையில் கவனம் தேவை. வேலைப்பளு அதிகரிக்கும். சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும். கடன் வாங்காதீர்கள், ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் யாருக்கும் கடன் கொடுக்கவோ வேண்டாம்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். குரு பார்வையால் உங்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரும் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். குபேர யோகம் தேடி வரப்போகிறது.

மீனம்

மீனம்

உங்கள் ராசியில் உள்ள உங்கள் ராசிநாதன் குரு பகவான்ராசிக்கு தன, வாக்கு ஸ்தானமாகிய இரண்டாவது வீட்டில் அமரப்போகிறார். குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6ஆம் வீடு, 8ஆம் வீடு 10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கடன் நோய் பிரச்சினைகள் தீரும் காலம் வந்து விட்டது. மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் நீங்கும். செய்யும் வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு தற்போது பார்க்கும் வேலையை விட நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபமும் அதன் மூலம் பண வருமானமும் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+