குரு பெயர்ச்சி பலன் 2023: திருமண யோகம் தரும் குரு பலம்..ஆவணியில் சிங்கிள்ஸ் எல்லாம் கமிட்டட் ஆகலாம்
சென்னை: குரு பலன் வந்து விட்டாலே திருமண யோகமும், குழந்தை பாக்கியமும் கிடைத்து விடும். ஆடி போய் ஆவணி வந்தால் சில ராசிக்காரர்கள் வீட்டில் கெட்டி மேளம் கொட்டப்போகிறது. மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவானின் அருளால் எந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கப்போகிறது. எந்த சிங்கிள்ஸ் எல்லாம் கமிட்டட் என ஸ்டேட்டஸ் போடப்போகிறீர்கள் என்று பார்க்கலாம்.
கோடி புண்ணியம்: குரு பார்வை கோடி புண்ணியம் குரு அமரும் இடத்தை போல குரு பார்வை குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானத்தின் மீது விழும் போது திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இந்த குரு பெயர்ச்சியால் குடும்பம் உருவாகி இல்லற பந்தத்தில் இணையும் யோகம் நமக்கு இருக்கிறதா என்று ஆசையோடு பலரும் ராசி பலன்களை படித்து வருகின்றனர். மேஷம் ராசியில் இருக்கும் குரு பகவானின் பார்வை சிம்மம்,துலாம்,தனுசு ராசிகளின் மீது விழுகிறது.

குரு பலன்: குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிடுகிறார். மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் தனது பொன்னொளி பார்வையால் சிம்மம், துலாம், தனுசு ராசிகளை பலமடையச் செய்கிறார். குருபகவான் பொதுவாக ராசியில் அமரும் போதோ அல்லது 2,5,7,9,11 ஆகிய இடங்களில் அமரும் போதோ முதல்தர குரு பலம் வந்து விட்டதாக கூறலாம். அதே போல 3, 8, 10 ஆம் இடங்களில் அமரும் போது இரண்டாம் தர குரு பலம் வந்து விட்டதாக சொல்லலாம்.
கெட்டிமேளம்: இந்த முறை மீனம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான குருபலம் வந்துள்ளது. காரணம் குடும்ப குரு, ஜென்மகுரு, லாப குரு, பாக்ய குரு, களத்திர குரு, பூர்வ புண்ணிய குரு என இந்த ராசிகளில் குரு சஞ்சரிக்கிறார். இதனால் சிங்கிள்ஸ் ஆக இருக்கிற இந்த ராசிக்காரகள் எல்லாம் குடும்ப வாழ்க்கையில் ஆவணி மாதம் முதல் மிங்கிள்ஸ் ஆகப்போகிறீர்கள். அதேபோல புத்திர பாக்கியமும் தேடி வரப்போகிறது.
குடும்ப உறவு: மேஷ ராசிக்கு ஜென்ம குருவாக பயணம் செய்யும் நேரத்தில் அவரது பார்வை ராசிக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களின் மீது விழுவதால் திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
லாப குரு பார்வை: குருபகவான் மிதுன ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிக்கு 3, 5, 7ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஒரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும்.
ராஜயோக காலம்: குரு பகவானின் பார்வை சிம்ம ராசியின் மேல் விழுவதால் குருவின் பரிபூரண ஆசியோடு அற்புதமான ராஜ யோகம் கிடைக்கும். ஒன்பதாம் பார்வையாக 5ஆம் வீட்டில் குரு பார்வை தனுசு ராசியின் மீது விழுகிறது. பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால் புதிய முயற்சிகள் கைகூடி வரும்.
களத்திர குரு: துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் மனதிற்கு பிடித்த வரன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். நீண்டநாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.
பூர்வ புண்ணிய குரு: தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக ராசியை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியாலும் குரு பார்வையாலும் உங்களுக்கு இந்த முறை குரு பலன் வந்திருக்கிறது. திருமண யோகம் கை கூடி வருகிறது. அதே போல புத்திர பாக்கியமும் கிடைக்கப் போகிறது. ஆவணி மாதத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் நிகழப்போகும் அற்புத பலன்களை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications