குரு பெயர்ச்சி பலன் 2023: குரு சண்டாள யோகம்..6 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை..என்ன செய்தால் தப்பிக்கலாம்
சென்னை: குரு பெயர்ச்சி இன்னும் சில வாரங்களில் நிகழப்போகிறது. மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு பகவான் மேஷ ராசியில் அஷ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரும். சில ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன சிரமங்கள் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் எந்த கோவிலிலுக்கு செல்ல வேண்டும் என்றும் பார்க்கலாம்.
குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த முறை குரு பகவான் தனித்த குருவாக இல்லாமல் சில மாதங்கள் மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்வார். குரு பகவானும் ராகுவும் இணைந்திருப்பது குரு சண்டாள யோகம் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த குரு பெயர்ச்சியால் நாட்டில் உள்ள மக்களில் பலருக்கு திடீர் யோகங்கள் கிடைக்கும். தொழில் வளம் பெருகும். மழை தவறாது பெய்யும் விவசாயம் செழிக்கும் என பொது பலனாக கூறப்பட்டுள்ளது. எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் - விரைய குரு
ரிஷப ராசிக்கு குரு லாப ஸ்தான அதிபதி, 8ஆம் வீட்டிற்கும் அதிபதி. நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் நிறைய பணவரவு வந்தாலும் கூடவே செலவுகள் வரும். குரு பார்வை உங்க ராசிக்கு நான்காம் வீடு, ஆறாம் வீடு, மற்றும் எட்டாம் வீடுகளை குரு பார்வையிடுகிறார். சோதனைகளை சாதனைகளாக்குவீர்கள். நடுத்தர வயதுடையவர்களுக்கு யோகம் வரும். வேலை தொழிலில் முன்னேற்றம் நடக்கும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாம். நன்மைகள் நடக்கும். பரிகாரத்திற்காக நீங்க தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான முறப்பநாடு கைலாயநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய தோஷங்கள் நீங்கும்.

கடகம் - கர்ம குரு
குரு பகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். பத்தில் குரு பதவி பறிபோகும் என்பார்கள். தொழில் அல்லது வேலையில் மாற்றங்கள் நிகழும். குருவின் பார்வை உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறது. பணம் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி சுப்ரமணியரை வழிபட வேலை,தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கும்.

கன்னி -அஷ்டம குரு
கன்னி ராசிக்காரர்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு ராகு உடன் இணைந்து அமர்வதால் இதுநாள் வரை ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். உங்கள் பிரச்சினைகள் குறையும் உதவிகள் தேடி வரும். கன்னி ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய கோவில் தென் திட்டை ராஜகுருவை வணங்க நன்மைகள் நடக்கும். இந்த குரு பெயர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு விரைவில் நீங்கும்.

விருச்சிகம் - ருண ரோக சத்ரு குரு
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு நன்மைதான் செய்வார். குரு ஆறாம் வீட்டில் ராகு உடன் இணைந்து அமர்கிறார். எதிரிகள் தொந்தரவு நீங்கும் என்றாலும் கடன் நோய் பிரச்சினை மன அழுத்தத்தை தரும். புதிய முயற்சிகள் எதையும் செய்யாதீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். கடன் வாங்குவதை தவிர்க்கவும் உங்களுடைய பணத்தை யாருக்கும் கடனாகக் கொடுக்காதீங்க. தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குரு பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளுங்கள். மேதா தட்சிணா மூர்த்தியை வணங்க பாதிப்புகள் குறையும்.

மகரம் - சுக ஸ்தான குரு
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே உங்களுக்கு குரு சாதகம் செய்ய மாட்டார்.குரு சுக ஸ்தானத்தில் அமர்வதால் அம்மாவின் உடல்நலனில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் என்றாலும் கவனம் தேவை. வீடு, வண்டி வாகனம் வாங்கும் போது எச்சரிக்கை தேவை. நான்காம் வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். அம்மா, மனைவி உடல் நலனில் கவனமாக இருங்க. நீங்க செல்ல வேண்டிய கோவில் பாடி திருவலிதாயம் சென்று குருபகவானை வணங்கவும்.

கும்பம் - தைரிய குரு
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே. மூன்றாம் அதிபதி குரு பகவான் மறைகிறார். இது உங்களுக்கு நன்மை தருவதில்லை. சிறு தூர பயணங்கள் நன்மை செய்யும். குரு உங்க ராசிக்கு ஏழாம் வீட்டினை பார்க்கிறார். ஒன்பதாம் வீட்டினையும் லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் திருமணம் கைகூடும், பாக்கியங்கள் கிடைக்கும், செய் தொழிலில் லாபம் வரும். இளைய சகோதர சகோதரி வகையில் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதிப்புகள் குறைய நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் குருபகவான், சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்ய நன்மைகள் நடக்கும்.












Click it and Unblock the Notifications