குரு பெயர்ச்சி பலன் 2023: குரு தரப்போகும் குபேர யோகம்..6 ராசிக்காரர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்!
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். ஜூன் மாதம் முதல் நவம்பர் 22 வரை மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை தொடர்பு கொள்ளும் பொழுது நன்மையே நடக்கும். பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம். குரு ராசிக்குள் பயணம் செய்வதால் புது முயற்சிகள் கைகூடும். தொட்டது துலங்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும்.
சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி.

ரிஷபம்: வெளிநாட்டு பயணம் சொந்த வீடு தூக்கம் போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார்.
குரு பகவான். பொதுவாக மீனம் தனுசுக்கு சுக்கிரன் நன்மை செய்ய மாட்டார் அதே போல துலாம் ரிஷபம் ஆகிய ராசிக்கு குரு நன்மையை செய்யமாட்டார் அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம் பாவம் சுக ஸ்தானம் என்று பெயர். வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். இது வரை இருந்த நோய் நொடி சிக்கு பிணி கேடுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும்.
மிதுனம்: குரு பகவான் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம், லாபம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ம் பாவத்தில் பயணம் செய்கிறார். குரு பகவான் லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்வையிடுகிறார். ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும் புதிய பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம்
கடகம்: குரு பகவான் பத்தாம் பாவமான தொழில், கங்கா ஸ்தானம், மாமியார் வீடு கர்மா ஸ்தானம் என்ற இடத்தில் பயணம் செய்கிறார். கோசாரத்தில் பத்தில் குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இது வரை கொடுத்த வாக்குறுதிகளை இனி நிறைவேற்றி விடலாம். பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புதிய முயற்சிகள் கை கூடி வரும். செய்யும் தொழில் வளர்ச்சி அடையும்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு குரு பகவான் வருகிறார். ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும். தனது ஜந்தாம் பார்வையாக உங்கள் ராசியை குரு பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். நீண்ட காலமா வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் எக்கசக்கமா இருக்கே என்று உறவினர்கள் குழைவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.
கன்னி: உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு பயணம் செய்கிறார். மேஷ ராசியில் இருக்கும் குரு 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். பணம் சேமிப்புகள் கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும்.வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். புது வீடு கட்டி குடிபோவார்கள். சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகள் கை கூடும். தொழில் லாபம் கூடும். வேலையில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை. வியாழக்கிழமை முருகப்பெருமானையும் குரு பகவானையும் வணங்கலாம்.
துலாம்: குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார். உங்களுடைய நிண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். பண வரவு அதிகரிக்கும். வரவேண்டிய கடன் பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.
விருச்சிகம்: குரு பகவான் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்தில் பயணம் செய்கிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்க ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில் நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2 ஆம் இடமான தனகாரகன் குருவே அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் கோயில்களில் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது நல்லது.
தனுசு: கடந்த ஏழரை ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு குரு பகவான் ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். போகாத கோயில் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. இந்த குருபெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
மகரம்: சுக ஸ்தானமான ராசிக்கு 4 ல் ராகு உடன் பயணம் செய்யும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள். வீட்டில் மனைவி வகையில் சிறு வைத்திய செலவுகள் வரலாம். குரு பகவான் பத்தாம் பாவத்தை பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் பதவி உயர்வு பதவியில் முன்னேற்றம் உண்டாகும். புது வேலை கிடைக்கலாம். சிலருக்கு சொந்த வீடு சொகுசாக இருக்கும் என்றாலும் வாடகை வீட்டிற்கு செல்வது நல்லது. மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சியால் இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் மாறிமாறி வரும் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும். பெருமாள் வழிபாடு புதன்கிழமை செய்வது நல்லது
கும்பம்: குரு பகவான் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்தில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்விக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும். பொருளாதார நிலை திருப்தி தரும்.சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும்.
மீனம்: உங்கள் ராசிநாதன் குரு பகவான் தனஸ்தானத்தில் வரும் பொழது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். வருமானமும் வந்து கொண்டே இருக்கும். குரு பகவானின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளின் மீது விழுகிறது. வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும். திருமணம் சுபகாரியங்களால் புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும்.அதே போல் நோய் நொடி சீக்கு பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழது.இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முன்னேற்றம் மாற்றமும் வரும்.
வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது.












Click it and Unblock the Notifications