குரு பெயர்ச்சி பலன் 2023: பொற்காலம்..கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகும் ராசிக்காரர் நீங்கதான்!
சென்னை: பொன்னவன் குருபகவான், துலாம் ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்து ராசியை பார்க்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதம், ஆனந்தம் நடைபெறப்போகிறது. நேற்று வரை கடன் தொல்லை, கணவன் மனைவி பிரச்சினை, பிள்ளைகளால் மன துயரம் ஏற்பட்டிருந்தது. இனி பிரச்சினைகள் தீரும் காலம் வந்து விட்டது. குருபலன் வந்து விட்டது. ராசியை பார்ப்பதால் சொல்வாக்கும், செல்வாக்கும் பெருகும் கால கட்டம் வந்து விட்டது.
சபைகளில் பெரிய மனிதர்களினால் மதிக்கப்படுவீர்கள். பிசினஸ் பர்ட்னர் நன்றாக அமையும். கடல் கடந்து செல்லக்கூடிய நேரம் வந்து விட்டது. கல்விக்காக வெளிநாடு செல்வார்கள். இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலையும் கிடைக்கும்.

ராசிக்கு 3வது இடத்தை பார்க்கிறார். அங்கு ராகுவும் இருக்கிறார். நோய்கள் தீரும் காலகட்டம் இது என்பதால் கவலை வேண்டாம். லாப ஸ்தானமான 11வது வீட்டை குருபகவான் பார்க்கிறார். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும், மூத்தவர்களின் உதவி கிடைக்கும் காலம் இது உயர்வான கால கட்டம் இது. சுக்கிரன் வீட்டை குரு பார்ப்பதால் நன்மைகள் அதிகம் நடக்கும். வங்கித்துறையில் வேலை செய்பவர்களுக்கு இது சிறந்த குரு பெயர்ச்சி, குழந்தை வரம் கிடைக்கும்.
இதுநாள்வரை எதிரிகள் தொந்தரவு, கடன் தொந்தரவு இருந்தது. இனி அற்புதமான குருப்பெயர்ச்சியாக அமைகிறது. ஏழாம் வீட்டில் அமர்ந்து பார்வையிடுவது பொன்னான காலம். வெளிநாடு யோகம் கிடைக்கிறது. பணவரவு அபரிமிதமாக இருக்கும். மூத்த சகோதரர்களின் அன்பும் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரர்கள், மூத்த சகோதரர்கள் அற்புதமாக இருப்பார்கள். உறவு பலப்படும். வயது மூத்தவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். தகுதி திறமைகள் வெளியே தெரியும். மாணவர்கள் மேன்மையடைவீர்கள். சிக்கல்கள் பிரச்சினைகள் தீரும். கல்வியில் அக்கறை செலுத்துவீர்கள்.
நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். குரு பலன் இருப்பதால் திருமண முயற்சிகள் கைகூடி வரும். திருமணத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களின் வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கப் போகிறது. கண்டச்சனியால் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம். தடைகளை ஏற்படுத்தி வந்த சனிபகவானை கட்டுப்படுத்த குருபகவான் அந்த வீட்டில் அமரப்போகிறார்.
குரு பகவான் மந்திரத்தை உச்சரியுங்கள் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கப் போகிறது. உங்களுக்கு நிம்மதி பிறக்கப் போகிறது. ஏழாம் வீட்டில் ஏற்கனவே ராகு அமர்ந்து இருக்க குருவும் அங்கே அமர்வதால் கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து இனி அற்புதமாக இருக்கப் போகிறது. உங்களின் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications