குரு பெயர்ச்சி பலன் 2024: ஜென்ம குரு.. 12 ஆண்டுகளுக்குப் பின் ரிஷபத்திற்கு வரும் குரு.. திடீர் லக்
சென்னை: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் இன்னும் சில மாதங்களில் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 2024 மே 1 ஆம் தேதி முதல் மே 14, 2025 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் ஜென்ம குருவாக பயணம் செய்தாலும் அவரது பார்வை, கன்னி, விருச்சிகம், மகர ராசியின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்று பார்க்கலாம்.
ரிஷபம்: மே 1 ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்குள் நுழைகிறார் குரு பகவான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜென்ம ராசிக்கு வருகிறார் குருபகவான். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். அச்சம் தேவையில்லை. வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகளும் வேலைச் சுமையும் அதிகரிக்கும்.

குரு உங்களின் 5 ஆம் வீட்டைப் பார்ப்பதால் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்ட நிலை மாறும். குழந்தை பிறக்கும். மகளுக்கோ, மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.
குரு உங்களின் 7ஆம் வீட்டைப் பார்ப்பதால் தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். அயல்நாட்டில் இருக்கும் உறவினர் - நண்பர்களின் உதவி கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார்.
உங்களின் 9ஆம் வீட்டை குரு பார்ப்பதால், ஓரளவு வருமானம் உயரும். வட்டிக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். பயணங்கள் சாதகமாகும். பதவிகள் பட்டங்கள் கிடைக்கலாம். ஜென்ம குரு என்பதால் பண விசயத்தில் கவனம் தேவை. எவருக்கும் வாக்குறுதி கொடுப்பதோ, பணம் நகையை யாருக்கும் இரவல் தருவதோ வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அசைவ, கார உணவுகளைக் குறையுங்கள். வீண் செலவுகளையும் தவிர்க்கவும்.
பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். இளைய சகோதர வகையில் நல்லது நடக்கும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். முக்கியப் பொறுப்புகள் தேடி வரும். மனைவி வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் பள்ளி-கல்லூரி சேர்க்கை நல்லவிதமாக முடியும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் முன் யோசனை தேவை. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அரசு வேலை, பதவி உயர்வுக்காக தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். சம்பளம் கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தவும். இந்த குருப்பெயர்ச்சி சகிப்புத் தன்மையால் உங்களை சாதிக்க வைக்கப்போகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications