"காசு பணம் துட்டு மணி மணி".. ரிஷப ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. உங்க காட்டில் பண மழை தான்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றம். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

Guru peyarchi Rishabam

குரு சுபத்துவம் முழுமையாக பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.

அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு கடந்த ஓராண்டில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள், சிந்தனையில் தடை, வேலை இழப்பு போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள். தற்போது குரு 2 ஆம் இடத்துக்குப் போகிறார். குடும்ப ஸ்தானத்தை அபிவிருத்தி செய்வார். குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து பணப் பிரச்சனைகளும் தீரும். பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான யோகம், வாங்கும் யோகம் உண்டாகும்.

குரு புதன் வீட்டில் இருப்பதால் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், கம்மல், கடுக்கன் வாங்கும் யோகம் உண்டாகும். லக்கினத்தில் குரு இருக்கும்போது பெரிய கெளவரவத்தை கொடுத்திருக்க மாட்டார்கள். உங்கள் பேச்சை கேட்காத சூழ்நிலைதான் இருக்கும். தற்போது குரு 2 ஆம் இடத்துக்குப் போவதால் வாக்கு ஸ்தானம் என்பதால் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்ற நிலை உருவாகும். கெளரவம் அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும்.

லோன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு முகத்தின் லட்சணம் அதிகரிக்கும். துலாமிற்கு குருவின் நேரடி பார்வை பலம் கிடைக்கும். வயிறு தொடர்பான, ஆரோக்கிய பிரச்சனைகள், தூக்கமின்மையால் அவதிப்படுவர்களுக்கு நோய்கள் தீரும். பித்தம், நாடி, கபத்தால் உண்டான பாதிப்புகள் தீரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத் துறைகளில் தேர்வாவீர்கள்.

சிவில் சர்வீஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள் அருமையான காலகட்டமாக இருக்கும். வாக்கு ஸ்தானத்தில் குரு அமைந்துள்ளதால் இன்டர்வியூக்களில் கலக்குவீர்கள். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சண்டை, சச்சரவுகள் குறையும். நீதிமன்றம், வழக்கு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

8 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். தகுதியே இல்லாத விஷயங்கள் கூட உங்களை தகுதிக்குரியவர்களாக மாற்றும். தொழில் ஸ்தானம் 10 ஆம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால், வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அடுத்த ஓராண்டுக்கு பிரச்சனை இருக்காது. தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

தங்கம், வெள்ளி, ஆபரணங்களில் முதலீடு செய்வது நல்லது. கடனை அடைப்பது நல்லது. கடனை வைத்துக் கொண்டு முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. சிறு சிறு கடன்களை அடைத்து ஒரே கடனாக வைத்துக் கொள்வீர்கள். பாத்திரக் கடை, வெள்ளிக் கடை ஆரம்பிப்பது நல்லது.

வழிபாடு, பரிகாரம்

படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு உணவு தானமாக கொடுப்பது நல்லது. எலுமிச்சை சாதம் தானமாக கொடுப்பது நன்மை பயக்கும். குருப்பெயர்ச்சியன்று செய்வது கூடுதல் நன்மை. ராஜ அலங்காரத்தில் இருக்கும் கிருஷ்ணர், வாமண ரூபத்தில் இருக்கும் கிருஷ்ணரை வழிபடுவது நல்லது.

மதிப்பெண்

சந்தோஷத்தின் அடிப்படையில் 85 சதவீதமும், பொருளாதாரத்தின் அடிப்படையில் 95 சதவீதம் நன்மை பயக்கும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+