Guru Peyarchi: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ரிஷபம்.. ஒரு விஷயத்தில் கவனம்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு யாருடைய ஆலோசனையையாவது சரியாக கேட்டு கடைப்பிடித்தால் முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய திறமையை என்னவென்று அறிந்து அதில் பணத்தைப் போடாமல் உழைப்பைப் போட்டால் நல்ல ஏற்றம் ஏற்படும். உங்களுடைய திறமையையும், திறனையும் மேம்படுத்திக் கொண்டாலே செழிப்பு உண்டாகும். செழிப்பைக் கொடுப்பதற்கு குரு பகவான் காத்துக் கொண்டிருப்பதால் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
கவனம்
வெளியில் இருந்து சில அழுத்தங்கள் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கொடுக்கல் வாங்கல், வரக்கூடிய வாய்ப்புகளில் தடை என பல்வேறு பிரச்சனைகளையும், உங்கள் மேல் அவநம்பிக்கையும் ஏற்படும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. கூடுதல் உழைப்பை போட வேண்டியதிருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது.
குருவின் அருள்
உடல் பருமன் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. தினந்தோறும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றைக் கடைப்பிடிப்பது நல்லது. அக்டோபர் மாதம் உங்களுக்கு மாதமாக இருக்கும். குருவின் ஆசிர்வாதம் கிடைக்கும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஜூன் மாதத்துக்குப் பிறகு தொழில்களைத் தொடங்கலாம். அகல கால் வைக்காமல் நிதானமாக படிப்படியாக செய்வது நல்லது.
பணவரவு
உங்களை தெரிந்த விஷயங்களை சிறிய பணம் வாங்கிக் கொண்டு சொல்லிக் கொடுப்பது உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். சந்திரன் அலைபாயும் மனதைக் கொடுக்கும் என்பதால் இதுபோன்ற நம்பிக்கையின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ரிஷப ராசிக்கு பண வரவு நன்றாக இருக்கும். முடங்கி இருக்கக்கூடிய பணம் உங்களிடம் வருவதற்கான அற்புதமான வாய்ப்பு ஏற்படும்.
திட்டமிடல்
இப்போது தான் வாழ்க்கைக்கான திட்டமிடலை தொடங்கியுள்ளீர்கள் என்பதால் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு செய்வீர்கள். இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட கால முதலீடுகளில் அந்தப் பணத்தை முதலீடு செய்து, அதன் மூலம் வரக்கூடிய பணத்தின் மூலம் சிறிது சிறிதாக கடனை அடைப்பீர்கள்.
கடன்
கடன் வாங்கி கடனை அடைக்கலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் அதன் மூலம் கடனை அடைக்காமல் வேறு இடத்தில் முதலீடு செய்து சிக்கலில் சிக்குவீர்கள். கடனைத் திருப்பி கொடுக்கும்போது செவ்வாய்க்கிழமையாகப் பார்த்து சிறிதளவாவது கடனை கொடுத்தால் கடன் விரைவில் அடையும் வாய்ப்புள்ளது. வம்பு வழக்கில் மாட்டியிருந்தால் அதன் வீரியம் குறையும் வாய்ப்புள்ளது.
சொத்துகள் வாங்கும் யோகம்
குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் இடம், வீடு வாங்குவதற்கான யோகம், வீடு கட்டும் யோகம் உண்டு. முயற்சி எடுத்தால் கட்டாயமாக இதனை சாதிக்கக்கூடிய சூழல் உள்ளது. வரும் பணத்தை முடிந்தளவுக்கு வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வது, கையில் பணம் வைத்துக் கொண்டுவிட்டு, முதலீடுகளில் கவனம் செலுத்துவது நல்லது. வளர்ச்சியை நோக்கி செல்லக்கூடிய முதலீடுகளை செய்து வைப்பீர்கள். போரூரில் உள்ள ராமநேதீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications