For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு உங்க ஜாதகத்தில் எப்படி இருக்கார்?.. சொந்த வீடு,நல்ல குடும்ப வாழ்க்கை யாருக்கு அமையும்?

Google Oneindia Tamil News

மதுரை: குரு பகவான் சுப கிரகம். குருபகவானின் பார்வையும் பயணம் செய்யும் இடத்தைப் பொருத்தும் அந்த ஜாதகருக்கு நன்மைகள் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் குரு பகவான் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் அமர்ந்து இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். இல்லாவிட்டால் வாழ்க்கையே போர்க்களமாகிவிடும்.

நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன்.

தனுசு மீனம் ராசிகள் குருவிற்கு ஆட்சி வீடு. கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல. கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 9,11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார்.

குரு பார்வை கோடி நன்மை

குரு பார்வை கோடி நன்மை

குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலம் பெறும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஓராண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைவார் குருபகவான். தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார் குரு. பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும். குரு பெயர்ச்சி கோச்சார பலனை ஏற்கனவே படித்திருப்பீர்கள். ஒருவரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் குரு இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஜாதகத்தில் ஜென்ம குரு

ஜாதகத்தில் ஜென்ம குரு

பிறந்த ஜாதகத்தில் ஜென்ம குருவாக லக்னத்தில் அமர்ந்திருப்பார் குரு. பொதுவாகவே குரு ஜென்மத்தில் இருந்தால் சிறந்த பேச்சாளராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும் நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்கள், விவிஐபிக்களின் தொடர்பு கிடைக்கும். குரு நல்ல நிலையில் இருந்தால் இந்த பலன் கிடைக்கும். அதே நேரத்தில் குரு பலம் இழந்து பாவிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தால் உடல்நிலை பாதிப்பு, காரிய தடைகள் ஏற்படும்.

தன ஸ்தான குரு

தன ஸ்தான குரு

குரு பகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து சுப கிரகத்தின் கூட்டணியோடு இருந்தால் பணவரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையாக சந்தோசமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த வீடே ஆனந்தமயமாக இருக்கும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ பலம் இழந்தோ இருந்தால் பணக்கஷ்டம் இருந்தாலோ குடும்பத்தில் குருச்சேத்திரப்போர்தான். ஒரே சண்டையாகத்தான் இருக்குமாம். அதே நேரத்தில் இரண்டாவது வீட்டில் குரு தனித்து இருந்தாலோ வறுமை வாட்டும் பணவருமானத்திற்கு தடுமாறுவார்களாம்.

தைரிய ஸ்தான குரு

தைரிய ஸ்தான குரு

ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் குரு இருந்தால் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிலும் தனித்துவமாக இருப்பீர்கள். குரு உடன் ஆண் கிரக சேர்க்கை இருந்தால் உடன் பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும். மூன்றாம் வீட்டில் குரு தனித்து இருந்தாலோ இளைய சகோதர தோஷம் கிடைக்கும்.

குரு நான்கில் இருந்தால்

குரு நான்கில் இருந்தால்

ஜாதகத்தில் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு இருந்தால் வசதி வாய்ப்பு கிடைக்கும். செல்வம், செல்வாக்கு அசையா சொத்து யோகம் நல்ல பழக்க வழக்கம் உயர்கல்வி யோகம் ஏற்படும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும்.நான்காம் வீட்டில் குரு தனித்து பலம் இழந்து இருந்தால் அசையாத சொத்து அமைய தடைகள் ஏற்படும்.

ஐந்தாம் வீட்டில் குரு

ஐந்தாம் வீட்டில் குரு

ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல் ஏற்படும். பரந்த மனப்பான்மை, பொதுக்காரிய ஈடுபாடு ஏற்படும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும், பெரியோர்களின் ஆசி கிடைக்கும். ஐந்தில் குரு தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். அதே நேரத்தில் சுப கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் சிறப்பான புத்திரபாக்கியம் அமையும்.

 ஆறில் குரு எதிரிகள் வெற்றி

ஆறில் குரு எதிரிகள் வெற்றி

ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நோய்கள் நீங்கும் நீண்ட ஆரோக்கியம் அமையும், சிறப்பான குடும்ப வாழ்க்கை ஏற்படும். அதே நேரம் ஆறாம் வீட்டில் குரு பலம் இழந்து இருந்தால் வயிறு கோளாறு ஏற்படும். பெரியவர்கள் சாபம் மனக்குறை ஏற்படும்.

மனைவியால் யோகம்

மனைவியால் யோகம்

ஏழாம் வீடு களத்திர ஸ்தானம். ஜென்ம லக்னத்தில் இருந்து குரு ஏழாம் வீட்டில் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். அதே நேரம் ஏழாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சினை எற்படும். திருமணம் நடந்தாலும் மணமுறிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

அஷ்டம குருவால் பிரச்சினை

அஷ்டம குருவால் பிரச்சினை

பிறந்த ஜாதகத்தில் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் குரு இருந்தால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும். திடீர் பணவரவு கிடைக்கும். வாழ்க்கை அமைதியாக இருக்கும். அதே நேரம் குரு தனித்தோ பாவிகள் சேர்க்கை பெற்றோ இருந்தாலே பலம் இழந்து இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும். பித்ரு சாபத்தினால் மன அமைதியில்லாத நிலை ஏற்படும். வியாழக்கிழமை விரதம் இருந்து குரு பகவானை வணங்கினால் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.

 ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு

ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு

குரு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இருப்பது நன்மை தரும் அமைப்பு. ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்று சொல்வார்கள். வெளியூர், வெளிநாடு சென்று பணத்தை சம்பாதிப்பார்கள். தாராளமான தன வரவு கிடைக்கும். பூர்வீகத்தால் அனுகூலம் கிடைக்கும். தந்தைக்கு நீண்ட ஆயுள், பொதுப்பணியில் ஆர்வமாக இருப்பீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.

 பத்தில் குரு உயர்பதவி யோகம்

பத்தில் குரு உயர்பதவி யோகம்

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு இருந்தால் உயர்பதவி யோகம் தேடி வரும். நேர்மையானவராக இருப்பீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். தனித்து இருந்தால் தடைகள் அதிகரிக்கும். குரு கிரக சேர்க்கை பெற்று பலம் இழக்காமல் இருப்பது நல்லது.

லாப குருவால் திடீர் அதிர்ஷ்டம் வரும்

லாப குருவால் திடீர் அதிர்ஷ்டம் வரும்

பிறந்த ஜாதகத்தில் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு இருந்தால் தாராளமான தன வரவு கிடைக்கும். சமூகத்தில் புகழ் கவுரவம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் மூலம் வசதி வாய்ப்பு கிடைக்கும்.

விரைய குருவால் நிம்மதியான உறக்கம்

விரைய குருவால் நிம்மதியான உறக்கம்

குரு பகவான் விரைய ஸ்தானமான 12வது வீட்டில் அமர்ந்தால் வீண் செலவுகள் ஏற்படும். 12ஆம் வீட்டில் குரு அமர்ந்து சுபரான புதன், சுக்கிரன் பார்வை பெற்றால் நிம்மதியான இல்லற வாழ்க்கை அமையும். சுப செலவுகள் அமையும். கண் பார்வை பிரச்சினைகள் தீரும். அதே நேரத்தில் குரு உங்கள் ராசிக்கு 6 அல்லது 8ஆம் அதிபதியாக இருந்தால் நல்ல பலன்களை தருவார்.

English summary
Guru vakra peyarchi 2022: (குரு வக்ர பெயர்ச்சி 2022 ஜாதகத்தில் குருவின் பார்வையும் பயணம் செய்யும் நன்மைகள்) According to the study of astrologers, Guru bhagavan is an influential and a benefic planet. Guru has different impact on individuals according to its transit in different houses.If in one's horoscope Guru Bhagwan is sitting in the seventh house from Janma Lagna with subar combination subar vision then the mental life will be blissful. A good, beautiful and comfortable woman will make a wife. Otherwise life becomes a battlefield.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X