அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. குரு வக்ர நிவர்த்தியால் மேஷம் ராசிக்கு செம மாற்றம்
குரு வக்ர நிவர்த்தி: 2025 சனி, குரு, ராகு கேது, சுக்கிரன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அதிலும் தை மாதம் மிகவும் சிறப்பானது. இந்த மாதத்தில் ஏற்கனவே செவ்வாய், சுக்கிரன் பெயர்ச்சிகள் உள்ளன. அதேபோல குரு வக்ர நிவர்த்தியும் இந்த மாதத்தில் நிகழ உள்ளது. இது மேஷ ராசியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை இந்தத் தொகுப்பில் காணலாம்.
பொதுவாக கிரகங்கள் நேர்கோட்டில் பயணிக்கும். அவை எப்போது பின்னோக்கி திரும்புகிறதோ அப்போது வக்ர நிலை என்போம். கிரகங்கள் திரும்பும்போது விளைவுகள் கடுமையாகத்தான் இருக்கும். அதிலும் குரு, செவ்வாய், சனி, ராகு, கேது, சுக்கிரன் வக்ரம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஜோதிட அறிவியல் கூறுகிறது.

குரு தற்போது ரிஷபம் ராசியில் வக்ரமாக வீற்றுருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். குரு, சனி பூமியின் வெளிவட்ட பாதையில் பயணிக்கும். குரு தனம், குடும்பத்துக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.
மேஷ ராசிக்கு குரு வக்ரத்தால் ஏராளமான இன்னல்கள் வந்திருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த நேரத்துக்கு பணம் வந்திருக்காது. கடன் தொல்லை அதிகமாக இருந்திருக்கும். குடும்பத்திலும் பிரச்னைகள் அதிகமாக இருந்திருக்கும். உங்களின் முன்னேற்ற பாதைகளில் அதிகளவு தடை கற்கள் இருந்திருக்கும். தொழிலிலும் திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறி இருக்காது.
குரு வக்ர நிவர்த்தி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகிறது. உங்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வரப்போகிறது. இந்த காலத்தில் பணவரவு திருப்தியாக இருக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் வாசல் கதவை தட்டுவார். எதிர்பாராத இடத்தில் இருந்தும் உங்களுக்கு பணம் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் அடையும். தன காரகனான குரு உங்களுக்கு இரண்டாம் இடத்தில் உள்ளார். அதனால் அதிர்ஷ்டம் இருந்தாலும் அது உங்களை வந்து சேர்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். அதனால் பொறுமை அவசியம். நிலம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட், பில்டர்ஸ்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
இரும்பு, கனிமவளம் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்போரும் இதுநாள் வரை தடைபட்ட பலன்களை அடைவார்கள். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை பணியாளர்களுக்கு உயர் பதவி, சம்பளம் உயர்வு உள்ளிட்ட உரிய அங்கீகாரம் கிடைக்கும். நிறைவேறவில்லையே என்று மனதில் கவலைப்பட்ட காரியம் எல்லாம் நிறைவேறும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
குரு 11 ஆம் இடத்துக்கு உரியவர். 11 என்பது லாப ஸ்தானத்தை குறிக்கும். அதனால் குடும்பத்துக்கு தேவையான ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உள்ளது. குழந்தைகளின் பெயர்களில் சேமிப்பு செய்வார்கள். சுப செலவுகளால் மனம் குளிரும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்காலத்துக்காக நல்ல முதலீடு செய்வார்கள்.
ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. குடும்ப உறவுகளின் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். அதனால் உங்களுக்கு மனக்கவலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. உங்களின் ஆசிரியர்கள், குரு, முன்னோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதன் மூலமாகவும், புத்தகங்களை தானம் செய்யும்போதும் குரு அருளால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications