Guru Vakra Peyarchi: ரிஷப ராசி பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பண வரவு கொட்டும்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் குரு வக்கிரம். ஏற்கனவே விவாகரத்துக்கு அப்ளை செய்தவர்களுக்கு கண்டிப்பாக பிரிவு ஏற்படும். மீண்டும் இணைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒன்னு சேரும் வாய்ப்பு உண்டு. காணாமல் போன பணம், சேமித்து வைத்த பணம், காதலிக்கு கொடுத்த பணம், நண்பர்களுக்கு கொடுத்த பணம் போன்றவை கட்டாயமாகத் திரும்ப கிடைக்கும்.
நகை மீட்பு
நகையை அடகு வைத்தவர்களுக்கு மீட்கும் வாய்ப்பு கிடைக்கும். மனம் குளிரக்கூடிய சூழல் உண்டாகும். குடும்பங்கள் சேரும். முக அமைப்புகளில் சைனஸ் பாதிப்புகள், கண் பாதிப்புகள், பல், ஈறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். அவற்றுக்கான மருத்துவம் பெற்று குணமடைவீர்கள். கண் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்வீர்கள்.
குடும்பம்
குழந்தைகள் தொடர்பான செலவுகள் ஏற்படும். குழந்தைகளுக்காக படும் கஷ்டங்களில் வெற்றிகள் ஏற்படும். நிறைய குழந்தைகளுக்கு மருத்துவர்களாக மாறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். நல்ல கல்லூரியில் சீட்டு கிடைக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திடீர் வாய்ப்புகள் வந்து சேரும். யாரோ ஒருவருக்கு கிடைக்க வேண்டியது எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு கிடைக்கும்.
பண வரவு அதிகரிக்கும்
பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் வெற்றிகள் ஏற்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு அருமையான சூழ்நிலை ஏற்படும். பெண்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷடத்தை அள்ளிக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்கள் சொல் பேச்சு கேட்டு செயல்படக் கூடாது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கழுத்து, நரம்புப் பகுதியில் பாதிப்பு ஏற்படும்.
வழிபாடு
என்னதான் இருந்தாலும் இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் நன்மைகளை மட்டுமே ஏற்படுத்தும். சந்தோஷம், பொருளாதார ஏற்றத்தையும் பொருத்தவரை 85 சதவீதமும் அருமையாக உள்ளது. ராமானுஜரை வழிபடுவது சகல விதமான ஏற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications