Guru Vakra Peyarchi: துலாம் ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு டாப் கிளாஸாக இருக்கும். துலாம் ராசி என்பது சுக்கிரனின் ராசி. குரு என்பது தேவாதிபதி. துலாம் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து நிறைய நல்ல விஷயங்களை செய்து கொடுத்திருப்பார். வீடு, திருமணம், வண்டி, வாகனம், குழந்தை பாக்கியம் என அனைத்து பாக்கியங்களையும் கொடுத்திருப்பார். ஆனால் தற்போது குரு வக்கிரமாகிறார்.
திருமண யோகம்
குரு வக்கிரமாகும்போது உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்து சேரும். வெளிநாட்டுக்குச் சென்று பணம் ஈட்டிக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்படும். திருமண பந்தத்தில் முறிவு ஏற்பட்டிருந்தால் இப்போது உங்களுக்கு திருமணமாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். இந்த நான்கு மாதங்களில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். லாபம் அதிகரிக்கும்.
பாக்கியம்
பிரிந்து போன அப்பா மகன் மீண்டும் சேரும் யோகம் உண்டாகும். அம்மா, அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது. அவர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு முக்கியம். நல்ல ஏற்றங்கள் கிடைக்கும். நல்ல விசேஷ பலன்கள் கிடைக்கும். நிறைய பேருக்கு வெளியூர் செல்லும் பாக்கியம், அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு புரொபஷராகும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
வெற்றி மேல் வெற்றி
எடுத்த காரியங்களில் வெற்றிகளைக் குவிக்கும் யோகம் உண்டாகும். வீடு, பணம், வண்டி வாகன யோகம் ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும் அற்புதமான காலகட்டம். சேமிப்புகளை செய்யத் தொடங்குவீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
வழிபாடு
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். கோவில்களை கட்டும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். பெரிய விஷயங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். சந்தோஷமும், பொருளாதாரமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். உக்கிரநாதசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications