குறி வச்சா இரை விழணும்.. கடக ராசிக்கு 2 1/2 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல நேரம் ஆரம்பம்.. அதிர்ஷ்டம் உண்டு
மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குரு, சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதன், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவான் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் கன்னி ராசிக்குள் வருகிறார்.
அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு ராசிநாதனான சந்திர பகவான் 3 ம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். உங்களுடைய மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். தெளிவாக முடிவெடுத்து தைரிய, வீரியமாக செயல்படுவீர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மனம், தொழில், வியாபாரம், வேலை, உறவுகள் என அனைத்து விஷயங்களிலும் தடைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்து வந்திருப்பீர்கல். இனி உங்களுக்கு புதிய வழிகள் பிறக்கும் காலகட்டமாக இருக்கும்.
பாக்கியம் கிடைக்கும்
இரண்டரை ஆண்டுகளாக 8 ஆம் அதிபதியான சனி பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்துகொண்டு பல்வேறு ரூபத்தில் பிரச்சனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கும். 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்குச் சென்றாலும் பெரிய பாக்கியங்கள் கிடைக்கவில்லை என பலரும் புலம்பியிருப்பீர்கள். ஜூன் 13 ஆம் தேதி சனி பகவான் வக்கிர நிலையை அடைவதால் இனிவரும் காலகட்டங்களில் கட்டாயமாக பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
வக்கிரம் என்பது இயல்புக்கு மீறிய தன்மை என்பதால் துக்கத்தையும், துயரத்தையும், தடையையும் கொடுத்து வந்த சனி பகவான் இனி நல்லது செய்ய ஆரம்பிப்பார். 10 ஆம் அதிபதியான செவ்வாய் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீச்சத்தில் இருந்து வந்ததால் பெரிய முன்னேற்றம், லாபம் இல்லாமல் இருந்திருக்கும். செவ்வாய் இப்போது தன ஸ்தானத்தில் வந்து அமர்ந்துள்ளதால் இனி தொழில், வியாபாரம், வேலை சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் கொடுக்கும்.
பண வரவு அதிகரிக்கும்
முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தேங்கிக் கொண்டிருந்த விஷயங்கள் வேகமாக நடக்கும். மந்தமாக இருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த இரண்டரை வருடங்களாக பட்ட அனுபவங்களை வைத்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். அதில் வெற்றி, லாபத்தையும் காணும் வாய்ப்பு நிச்சயம் உண்டாகும். தன வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். லாபாதிபதி வலிமையாக இருப்பதாலும், 10 ஆம் அதிபதி தொழில் ஸ்தானத்திலும் இருப்பதால் அபரிமிதமான யோகங்கள் கிடைக்கும்.
சொந்த வீடு யோகம்
4 ஆம் இடம் என்பது சுக ஸ்தானம். அதன் அதிபதி வலிமையாக இருப்பதால் சுகத்தை அடையக்கூடிய தன்மை இந்த ஜூலை மாதத்தில் உண்டாகும். வீட்டில் நிம்மதி ஏற்படும். மகிழ்ச்சி பெருகும். சுப காரியங்களைச் செய்து மகிழும் அமைப்பு உண்டாகும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சொந்த வீட்டுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வீட்டை புனரமைப்பது, வீட்டை புதுப்பிப்பது, வீடு வாங்குவது, வாகனத்தை வாங்குவது என உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும். 6 ஆம் அதிபதி 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடனை அடைப்பது, கடன் வாங்குவது போன்ற சிந்தனைகள் உருவாகும்.
எதிர்ப்பு, பகை நீங்கும்
எதிர்ப்பு, பகை, தொல்லைகளைச் சந்தித்து வந்தவர்களுக்கு அவை எதன் மூலம் வந்தது என்று அடையாளம் காணக்கூடிய மாதமாக இருக்கும். 6 ஆம் அதிபதி வலுப்பெறுவதால் நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கட்டாயமாக கிடைக்கும். குரு பகவான் 8 ஆம் இடத்தையும் பார்ப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
வெளிமாநிலம், வெளிமாவட்டத்துக்கு, வெளிநாடுகளுக்கு இடமாற்றம் கிடைக்கும். இதுவரை கிடைக்காத பாக்கியங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். அரசு வேலைகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். சுக்கிரன் பலமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயம், அதற்கான மன வலிமை கிடைக்கும். எங்கு வெளியில் சென்றாலும் விநாயகரை வழிபட்டுச் செல்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications