குரு, சனியால் ரிஷப ராசிக்கு ஜாக்பாட்.. தங்கம், புது வீடு, புது வாகனம் கொட்டும் அதிர்ஷ்டம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

ஜூலை மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குரு, சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதன், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

July month rasi palan Rishabam

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவான் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் கன்னி ராசிக்குள் வருகிறார்.

அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிநாதன் ராசியிலேயே ஆட்சி பலத்தோடு வலிமையாக இருக்கிறார். நினைத்தது நடக்கும் நேரமாக இருக்கும். எல்லா விதமான விஷயங்களையும் சமாளித்து, சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தனித்திறமையுடன் செயல்படக்கூடிய தன்மை இயல்பாகவே இருக்கும். தன்னை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைப்பில் ராசி, லக்கினம் செயல்படும்.

வேலைவாய்ப்பு

ராசிநாதன் சூரியன் நட்சத்திரத்தில் இருப்பதால் நீங்கள் ராஜபோல இருக்கும் அமைப்பு உள்ளது. சனி பகவான் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளது. அந்த சனி பகவான் வக்கிர நிலையை ஜூலை 13 ஆம் தேதி வக்கிர நிலையை அடைவதால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். படித்த படிப்புக்குண்டான, மனதுக்குப் படித்த வேலை கிடைக்கும். வக்கிரம் என்பது இயல்புக்கு மீறிய தன்மை என்பதால் கெடுதல் செய்த விஷயங்களும், நன்மைகள் தந்து கொண்டிருந்த விஷயங்களில் சிறு சிறு தொந்தரவுகள் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

யோகம்

நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை உணர்ச்சிவசப்பட்டு விடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றம், பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஜூலை 13 ம் தேதிக்குப் பிறகு இடமாற்றம், பதவி உயர்வு, புதிய பொறுப்பு, உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் தன்மை, அலுவலகத்தில் நற்பெயர் போன்றவை உருவாகும்.

வீடு, வாகன யோகம்

வீட்டுக்கும், வாகனத்துக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் உங்கள் ராசியிலேயே இருப்பதால் இந்த எண்ணங்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும். சுக்கிரன் சூரியனின் நட்சத்திரத்தில் பயணிக்கவுள்ளார். சூரியனும் 2 ஆம் இடத்தில் இருப்பதால் குடும்த்துக்காக, உங்கள் கனவை நிறைவேற்றுவதற்கான காலகட்டமாக இருக்கும். புதிய வீடு, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தன வரவு அதிகரிக்கும்

2 ஆம் இடத்தில் குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறிது டென்சன், அழுத்தம் இருக்கும். இருப்பினும் பண வரவு அற்புதமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம், பங்குச் சந்தையில் பண வரவு, லாட்டரியில் பரிசு, மறைந்துள்ள விஷயங்கள் மூலம் பணம் வரும் அமைப்புகள் உள்ளது. பணம் ஏதோ ஒரு வகையில் குவியக்கூடிய அமைப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும்.

ஆரோக்கியம்

தசா புத்திகள் சரியில்லை எனில் மிகுந்த மன அழுத்தம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. 6 ஆம் இடத்து அதிபதி ஆட்சி பலத்தோடு இருக்கிறார். குருவும் பார்ப்பதால் கேட்ட இடங்களில் கடன் கிடைக்கும். கடனை உங்கள் தகுதிக்கேற்றவாறு வாங்கிக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும், வயிறு, ஜீரணம், சர்க்கரை, கொழுப்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. தலைவலி, எழும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

வெளிநாடு வாய்ப்பு

குரு 8 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம், வேலை, படிப்பு, பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக வெளிநாடு செல்வது, மாவட்டம், மாநிலங்களுக்குச் செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களின் படிப்பு சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வித்தியாசமான துறையைத் தேர்ந்தெடுத்து படித்து அதில் வெற்றி பெறுவீர்கள்.

வழிபாடு

தனாதிபதியாக இருக்கும் புதன் வக்கிரமாக இருப்பதால் புதன் கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது, மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவது தனம் சார்ந்த விஷயங்களில் அற்புதத்தை ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+