மிதுன ராசிக்கு கூரையைப் பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் மிதுன ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம் ராசி பலன்
மிதுனம் ராசிக்காரர்கள் இந்த மாதம் சற்று பரபரப்பாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உத்யோகம், தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். முதல் 15 நாட்கள் புதன் பகவானால் அற்புதமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். உத்யோகம், தொழிலில் உங்களின் சமயோஜித புத்தியால் மேன்மையடைவீர்கள்.
மன நிம்மதி
புத்திக் கூர்மையால் காரியங்களில் வெற்றியடைவீர்கள். தெளிவான திட்டமிடல்களால் நற்பலன்களை பெறுவீர்கள். தடைபட்ட காரியங்கள் நிவர்த்தியாகும். குரு மற்றும் சூரிய பகவானால் வாழ்க்கை பிரகாசமாகும். பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் நீண்ட காலமாக திட்டமிட்டு வரும் பயணங்கள் இந்த காலத்தில் நிறைவேறும். பயணங்களால் மன நிம்மதி, அணுகூலம் ஏற்படும்.
குடும்பம்
குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் சரியாகி இணக்கமான சூழல் நிலவும். கணவன் - மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். குழந்தகளின் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் பெருமிதம் கொள்வீர்கள். குழந்தைகளின் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
வெற்றி
உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிச்சயம் கிடைக்கும். சிவராஜ யோகம் இருப்பதால் சிவன் பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். முதல் 15 நாட்களுக்கு பிறகு 9 கிரகங்களும் உங்களுக்கு சாதகமான அமைப்பில் இருக்கும். உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேறும். தொட்டது துலங்கி எல்லாவற்றிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
உத்யோகம், தொழில்
தொலைநோக்கு பார்வையால் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்துக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும். நெருக்கடியான காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையை அப்படியே மாற்றும். உத்யோகம், தொழிலில் நீண்ட காலமாக திட்டமட்ட காரியங்களில் இறங்குவீர்கள். அந்த முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைக்கும். உத்யோகம், தொழிலில் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
நண்பர்கள்
நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். பிரிந்த நண்பர்கள் இணைவார்கள். உங்களின் கடின உழைப்பு, முயற்சி, திறமை ஆகியவற்றுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
பரிகாரம்
பணிச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணம் விஷயத்தில் யாரையும் நம்பி சிபாரிசு செய்ய வேண்டாம். சிவன் மற்றும் மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு செய்வதால் தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். தேன் தானம் செய்வதால் லாபம் அதிகமாகும்.












Click it and Unblock the Notifications