ஜூன் ராசி பலன்: மேஷம், ரிஷபம் ராசிக்கு திடீர் ராஜயோகம்.. பண மூட்டையை அள்ளப் போறீங்க
ஜூன் மாத ராசி பலன்கள்: சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு குதூகலமான மாதமாகவும், ஜெயிக்கக் கூடிய மாதமாகவும், வெற்றி பெறக்கூடிய மாதமாகவும் இருக்கும். செவ்வாய் பலமாக இருப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். நிலபுலன்கள் வாங்கும் யோகம் உண்டு. செவ்வாய் 4 ஆம் வீட்டில் இருந்து பலமிழந்து கடகத்தில் இருந்தால் சற்று பிரச்சனைகள் ஏற்படும். ஆனால், ஜூன் 7 ஆம் தேதிக்குப் பிறகு 5 ஆம் இடத்தில் செவ்வாய் போவதால் நீங்கள் நினைத்த விஷயங்கள், நல்ல விஷயங்கள் நிகழ்த்திக் கொடுப்பார்.

சொத்து விவகாரங்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். சாதனை புரியும் காலகட்டமாக இருக்கும். நிறைய மருத்துவ செலவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அவை எல்லாம் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள். மன நிம்மதி ஏற்படும். உங்களைச் சுற்றிலும் நல்ல விஷயங்கள் நடக்கும். காலபுருஷனின் முதல் வீடு என்பதால் தலைமைப் பண்புடன் இருப்பீர்கள், அரசியல் வாதிகளாக இருப்பீர்கள். இதனால், நிறைய அழுத்தம் உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த தன்மைகள் எல்லாம் இந்த மாதத்தில் மாறும்.
தினந்தோறும் காலையில் முருகனை நினைத்து முருக மந்திரத்தை 11 நாள்கள் உச்சரித்து வர உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஜெயம் உண்டாகும். நல்லதை மட்டுமே கேட்பதையும், கோபத்தை தவிர்ப்பதும் நல்லது. அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வீட்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகம் உண்டாகும். இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் யோகமும் உள்ளது. குதிரைப் படத்தை வீட்டில் வைப்பது அற்புத பலன்களைத் தரும். நிறைய வெற்றிகள் கிடைக்கும்.
பரணி நட்சத்திரக்காரர்கள் யானை படத்தை வீட்டில் வைப்பது நல்லது. எந்த சனி நடந்தாலும் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படாது. வண்டி வாகனத்தில் மிகுந்த கவனம் தேவை. மற்றபடி எடுத்த காரியங்கள் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மூளையே மூலதனமாக இருக்கும். நிறைய ஏற்றத்தையும், இறக்கத்தையும் இந்த மாதத்தில் காணப் போகிறீர்கள். மாதத்தின் ஆரம்பத்திலேயே சூரியனும் புதனும் உச்சத்தில் இருப்பதால் ஆதித்ய யோகம் உண்டாகும். கோடீஸ்வர யோக அமைப்பு உள்ளது. எந்தவொரு விஷயத்துக்கும் பதற்றத்தை தவிர்ப்பது நல்லது. பின்னாடி நடக்கும் விஷயத்தை யோசித்து முன்கூட்டியே செயல்படுவீர்கள்.
பேச்சில் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. கூடா நட்பு கேடாய் முடியக் கூடாது என்பதால் யாரிடம் பேசினாலும் மிகுந்த கவனம் தேவை. செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் அமைதியாகக் கையாளுவது நல்லது. தாய்களுக்குச் செய்யும் கடமையை சரியாக செய்வது நல்லது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற தாயின் ஆசியைப் பெறுவது நல்லது. சகோதரன், சகோதரிகளுக்கு உதவி செய்வது நல்ல பலனைத் தரும்.
சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலுக்குச் சென்று வருவது அற்புத பலனைத் தரும். வெள்ளிக்கிழமைகளில் ரவா கேசரியை தானமாகக் கொடுப்பது நல்லது. நல்ல முன்னேற்றம், வளர்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும். பண வரவு உண்டாகும். ஜெயம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications