ஆடி மாதத்தில் கடக ராசிக்கு அடிக்கும் லாட்டரி.. அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருவதால் மிக கவனம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கடக ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ பழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமையில் தெய்வ வழிபாடுகள் செய்வது அனுகூலத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். கடக ராசிக்குள் சூரியன் வரும் மாதமே ஆடி மாதம் என்பதால் தொழில் ரீதியாக அதீத கவனமாக இருக்க வேண்டும். தலைவலி, நரம்பு போன்ற பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாதிப்புகள்
சட்டத்திற்குப் புறம்பானவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. இல்லையெனில் பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். சிறியதாக உணர்ச்சிவசப்பட்டால் கூட பெரிய பாதிப்புகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. கிட்னி செயல்பாடு, ரத்த அழுத்தம் தொடர்பான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் கவனமாக மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.
கவனம்
செல்போனில் பேசும்போதும், கையெழுத்து போடும் விஷயங்களிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம், கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையை விடுகிறேன் என்று கூறி உணர்ச்சிவசப்பட்ட ராஜினாமா செய்தால் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். கோளார் பதிகத்தை கேட்பதும், சொல்வதும் நன்மையை ஏற்படுத்தும்.
கடன்கள் தீரும்
2 இல் கேது பகவானும், 8 இல் ராகு பகவானும் இருப்பதால் பெற்றோர் பெரியோரின் ஆரோக்கியத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உறவுகளில் மேன்மை, அனுகூலம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். காலையில் எழுந்ததும் முதல் ஆகாரமாக ஒரு சிட்டிகை நெய் அல்லது ஒரு ஸ்பூன் தயிர் சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும்.
தன்னம்பிக்கை
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். உங்களின் முயற்சி ஸ்தான அதிபதி புதன் ராசியிலேயே அமர்ந்துள்ளார். கூடவே தன்னம்பிக்கையை அள்ளி கொடுக்கும் சூரியன் பகவானும் ராசியிலேயே இருக்கிறார். இது அற்புதமான பலன்களை கொடுக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பதவி உயர்வு
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும். சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் வக்கிரமாகியிருப்பது உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு முயற்சிகளில் வெற்றி தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் சிறப்பான வெற்றியை தரும்.
-
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications