Rasi Palan This Week: கடக ராசிக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை.. இனி பண மழை கொட்டும்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-that-kadagam-cancer-sign-will-get-from-november-2-to-9

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பண வரவில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் இனி சுபிக்ஷம் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் அனைத்து விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பற்றக்கூடிய யோகமான நேரம்.

பொறுப்புகள் கூடும்

தொழில் ரீதியாக பெரிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலம் அதிகளவில் பெறுவீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் எல்லா விதமான ரிஸ்குகளையும் எடுக்கலாம். தொட்ட காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள்.

குடும்பம்

குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணத்தில் இருந்து வந்த அனைத்து தடைகளும் நீங்கும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரிந்த கணவன், மனைவிகள் ஒன்று சேரும் யோகம் உண்டு. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் உண்டாகும்.

பதவி உயர்வு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகப்பெரிய வெளிச்சம் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக் கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. சூரியன் ஐப்பசி மாதம் முழுவதும் நீச்சத்தில் இருப்பதால் வார்த்தைகள் விஷயத்தில் மட்டும் அதீத கவனமாக இருப்பது நல்லது.

ஆரோக்கியம், வழிபாடு

அசிடிட்டி, வயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. துர்க்கை கவசம், துர்க்கை மந்திரங்களை கேட்பது, சொல்வது மேன்மையை ஏற்படுத்தும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானை வழிபாடு செய்வது மன அழுத்தத்தையும், பகையையும் வெல்லும் பாக்கியத்தை தரும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+