Rasi Palan This Week: கடக ராசிக்கு அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. இனி அதிர்ஷ்டம் தான்
வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்ற அனைத்து மாற்றங்களும் உண்டாகும். சுப காரிய அமைப்பு உள்ளது. பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். உறவுகளால் அனுகூலம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
தொழில்
புதிய தொழில்களை செய்யும் அமைப்புள்ளது. புதிய பொறுப்புகள் கிடைக்கும். அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றிகள் பெறுவீர்கள். வேலை ரீதியாக எல்லா விதத்திலும் அனுகூலம் காணப்படும். பெரிய நம்பிக்கை ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஒவ்வாமை தொடர்பான விஷயங்களில் அதிக கவனமாக இருப்பது நல்லது.
கஷ்டங்கள் நீங்கும்
கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அனுகூலமான அமைப்பு ஏற்படும். உத்தியோகத்தில் தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல்கள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. எல்லா விஷயத்தையும் சுமூகமாக முடிப்பீர்கள். தேவையில்லாத பதட்டத்தை தவிர்ப்பது நல்லது.
அரசு வேலை
ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். அரசு வங்கியில் வேலைகள் கிடைக்கும். நிறைய பேருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அம்மாவுக்கு, உங்களுக்கும் இருந்த வாக்குவாதங்கள் நீங்கும். மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு அருகே வீடு, நிலம் அமையும்.
வழிபாடு
எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உங்களுடைய பேச்சுகள் அநைத்தையும் செய்து முடிப்பீர்கள். நெஞ்சு, நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் அனைத்தம் நீங்கும். ஜில்லென்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ருத்ரன் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications