Rasi Palan This Week: கடக ராசிக்கு இரண்டாவது இன்னிங்ஸ்.. இது நம்ம காலம்.. இறங்கி ஆடுங்க

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-weekly-rasi-palan-what-kind-of-benefits-cancer-kadagam-people-will-get-from-september-15

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் அதி அற்புதமாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடைகிறது. அதனால் கொடுத்த நேரத்தில் வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சமூகத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். உத்யோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் காணப்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் நிகழும்.

பொறுப்புகள்

பதவி உயர்வு, சம்பள உயர்வு என எங்கள் திறமைக்கேற்ற புதிய அங்கீகாரம் கிடைக்கும். அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போருக்கு சிறப்பாக இருக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசுப் பணி, தேர்வுக்காக முயற்சி செய்வோருக்கு இந்த காலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய சிக்கலை கடந்து, அற்புதமான மாற்றங்களால் பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

2வது இன்னிங்ஸ்

கடந்த காலங்களில் பதவியை இழந்த அரசியல் வாதிகளுக்கு இரண்டாவது இன்னிங்ஸாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்யோகம், தொழிலில் எதிர்காலத்தில் ஆலமரமாக மாறி பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கான துளிர் விடும் காலம் இது. தாய், தந்தை உறவால் ஆதாயம் அடைவீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

முன்னேற்றம்

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி சற்று தெளிவு கிடைக்கும். இழுபறியாக இருந்த சூழ்நிலைகள் மாறி படிப்படியாக நல்லது நடக்கும். முதலீடுகளில் லாபம் நன்றாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான இது சரியான காலம். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காணப்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தொழிலில் விருத்தி நடைபெறும்.

கவனம்

கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளவும். நெருங்கிய நண்பர்கள், உறவுகளிடம் கோபப்பட்டு வார்த்தையை விடுவது உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும். எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் மீது அக்கறையுள்ள நண்பர்கள், உறவுகளை அரவணைத்து செல்வது முக்கியம். காது, மூக்கு, தொண்டை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டு அருகில் உள்ள பிள்ளையார் கோயில் சென்று வழிபடுவது அனைத்திலும் வெற்றியை உறுதிப்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+