Rasi Palan This Week: கடக ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. வார்த்தைகளால் வரப்போகும் ஆபத்து.. கவனம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி முதல் ஆவணி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். வார்த்தைகளை கணிவாகப் பயன்படுத்துவது நல்லது. தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் காணப்பட்டு வந்த சிக்கல்கள் தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் இனி நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
வியாபாரத்தில் அனுகூலங்கள் காணப்படும். இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். யோகம், அதிர்ஷ்டம் நிறைந்த நேரம். தாய் வழி, தந்தை வழி உறவுகளில் மிகப்பெரிய நன்மையும், ஏற்றமும் உண்டாகும், வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த அனுகூலங்கள் கிட்டும்.
தடங்கல்கள் நீங்கும்
தொடர்ச்சியாக இருந்த தடங்கல்கள் எல்லாம் வெற்றியடையும். வாக்குவாதத்தை மட்டும் தவிர்த்துக் கொண்டாலம் எல்லாமே உங்களுக்கு நன்மை தான். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மேன்மையை ஏற்படுத்தும். எல்லா விதமான தடங்கல்களும் நிவர்த்தியாகும். புதிய தொழில், உத்தியோகம், வியாபாரம், பொறுப்புகள் கிடைக்கக் கூடும்.
முன்னேற்றம்
குடும்பம், வெளியிடத்தில் என எங்கு பேசினாலும் பேச்சில் மட்டும் கவனம் தேவை வார்த்தைகளில் மட்டும் கவனமாக இருந்தால் எல்லா விதமான லட்சுமி கடாட்சமும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கவனம், வழிபாடு
காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி போன்ற தொந்தரவுகளில் கவனமாக இருப்பது நல்லது. முருகர் வழிபாடு தொழிலில் ஏற்றத்தை ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் நன்மைகள் கிடைக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்க கேட்க அனுகூலம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications