கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. கடன்கள் எல்லாம் தீரப் போகுது.. ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பழைய கடன்களை அடைப்பதற்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி, ஏற்றம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும். தாய் வழி, தந்தை வழி உறவுகளில் அனுகூலம் ஏற்படும்.
சுப விரையம்
கடக ராசியினர் வீட்டில் அதிக அளவிலான விரையங்கள் ஏற்படும். அதனை சுப விரையமாக மாற்றிக் கொள்வது நல்லது. மாற்றங்கள் வருவது பெரும் நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகளைத் தீர்ப்பீர்கள், கடக ராசி குழந்தைகள் பெயர், புகழ் பெறும் யோகம் உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். பண வரவு அதிகமிருக்கும் அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் சுபச்செலவுகளாக மாற்றிக் கொள்வது அவசியம்
தர்க்கம் வேண்டாம்
மேலதிகாரிகள், தொழில் ரீதியான விஷயம், ஆசிரியர்கள், உடன் வேலை செய்பவர்கள், உடன் படிப்பவர்கள், வேலையாட்களிடம் வாக்குவதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தர்க்கம் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களால் மனம் காயப்படுவதற்கான வாய்ப்புள்ளதால் பொறுமையாக, நிதானமாக செய்வது நல்லது. எந்தவொரு பாதிப்பு வந்தாலும் அதனைப் பார்த்துக் கொள்ளக்கூடிய அனுகூலம், சந்தோஷம் ஏற்படும்.
ஆரோக்கியம்
சிலருக்கு மருத்துவமனை செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் பெரிய பதிப்புகள் இல்லை. ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விரைவில் குணம் பெறும் வாய்ப்புள்ளது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கண் பாதிப்புகள், மயக்கம், படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது மிகுந்த கவனம் தேவை. வெள்ளிக்கிழமையில் குலதெய்வ வழிபாடு செய்வது, அருகில் உள்ள கோயில்களுக்குத் சென்று வருவது மேன்மையை ஏற்படுத்தும்.
-
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications