ஆடி மாத பலன் 2025: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. இந்த விஷயங்களில் ஜாக்கிரதை
ஆடி மாத பலன் : ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி ஆடி மாத பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு 11 ஆம் இடத்தில் ராசிநாதன் அமர்வதால் மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். லாபம் பன்மடங்காக உயரும். நிறைய லாபங்கள் கிடைத்தாலும் அதற்கு சரிசமமாக செலவுகளும் ஏற்படும். ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை அதிகளவில் விரையங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். சுப விரையங்கள் அதிகரிக்கும். 12 ஆம் வீட்டில் அமர்ந்துள்ள கேதுவால் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வேகம் அதிகரிக்கும்
ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் ராசியில் வந்து அமருவதால் உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பு ஏற்படும். அனைவரையும் வேலை வாங்கும் தன்மை உண்டாகும். உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். 2 ஆம் வீட்டுக்கு குருவின் பார்வை இருக்கிறது.
திடீர் அதிர்ஷ்டம்
2 ஆம் வீட்டின் அதிபதியும் குருவுடன் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஆனால் அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுக்கு போட்டியாக யாரையாவது நினைக்கத் தொடங்குவீர்கள். கோபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. புதன் வீட்டிற்குள் செவ்வாய் வருவதால் போட்டி மனப்பாம் உருவாகும். அதேநேரம் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களில் அதீத கவனமாக இருப்பது நல்லது.
முதலீட்டில் கவனம்
முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களை மற்றவர்கள் மூளைச் சலவை செய்யும் வாய்ப்பு உண்டு. கண்டகச் சனி நடந்து கொண்டிருப்பதால் உடல் நிலை, மனநிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. விரையம் அதிகரிக்கும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. விரக்தி மனப்பான்மை வருவதற்கான வாய்ப்புள்ளது. இத்தனை இருந்தாலும் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
பாக்கியங்கள்
குடும்பத்தினருடைய ஆதரவு கிடைக்கும். 4 ஆம் இடத்துக்கு சுக்கிரன் பார்வை இருப்பதால் நிறைய பாக்கியங்கள் கிடைக்கும். படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். போட்டி போட்டு படிப்பீர்கள். 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மீடியா, கலைத்துறை, சீரூடைப் பணியாளர்கள், ரியல் எஸ்டேட், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு விஷயத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
வழிபாடு
நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். குடும்பத்திற்கான வருமானம் அதிகரிக்கும். ஏலக்காயை வாயில் போட்டு வெளியில் செல்வது நன்மை பயக்கும்












Click it and Unblock the Notifications