கன்னி ராசிக்கு நீசபங்க ராஜயோகத்தால் கொட்டும் அதிர்ஷ்டம்.. பணமழையில் நனையப் போறீங்க
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் கன்னி ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
கன்னி
கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தினருக்கு அருமையான மாதமாக இருக்கும். உங்களுடைய அடையாளமாக இருக்கும் புதன் பகவான் 2 ஆம் இடமான தன ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்ந்து லட்சுமி நாராயண யோகத்துடன் பயணம் செய்யப் போகிறார். செல்வ செழிப்பு அற்புதமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும்.
சொத்துகள் கிடைக்கும்
உங்களுடைய பேச்சுக்கு மரியாதை ஏற்படும். அப்பா சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொந்தபந்தங்கள், கூட பிறந்தவர்களுடனான பிரச்சனைகள் எல்லாம் நீங்கி கையெழுத்து போடுவார்கள். இனி உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். செவ்வாய் ஆட்சி பலன் பெற்று குரு பார்வையில் இருப்பதால் சொத்து பிரச்சனைகள் இருந்தால் நீங்கும்.
வெற்றி மேல் வெற்றி
கிரகங்கள் வலுவாக இருப்பதால் சொத்து சார்ந்த விஷயங்கள், பணம், குடும்பம் சார்ந்த விஷயங்கள், பாகப் பிரிவினைகள் போன்றவற்றை செய்வது நன்மையைத் தரும். சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் தந்தை மூலமாக செயல்படுத்துவது உங்களுக்கு சாதகமாக அமையும். முயற்சியைக் கைவிடாமால் இருப்பது நல்லது. என்ன விஷயமாக இருந்தாலும் அதில் ஜெயித்து விட்டு வருவீர்கள்.
நீசபங்க ராஜயோகம்
மன ரீதியாக மன தைரியத்தைக் கொடுக்கும். கூட பிறந்தவர்களால் நன்மைகள் அதிகளவில் ஏற்படும். எதைத் தொட்டாலும் வெற்றி ஏற்படும். 12 ஆம் அதிபதியாக இருக்கக்கூடிய சூரிய பகவான் நீசபங்க ராஜயோகத்தைப் பெற்று 3 ஆம் வீட்டுக்கு வந்து குரு பார்வையில் நிற்பதால் அற்புதமான யோகம் ஏற்படும். 12 ஆம் அதிபதி மறைந்து குரு பார்வை பெறும்போது விபரீத ராஜயோகம் ஏற்படும்.
கணவன், மனைவி
பயணங்கள் மூலமாக சந்தோஷங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள் இருந்தாலும் இந்த மாதம் குடும்பத்தில் அன்பு பெருகும். குடும்பத்தில் இருந்த இருள் நீங்கும். குரு பகவான் 4, 7க்கு உடையவர் 11 ஆம் தேதிக்குப் பிறகு வக்கிரமாகிறார். குடும்பம், கணவன், மனைவி, வீடு, மனை, சொத்து சார்ந்த விஷயங்களை 11 ஆம் தேதிக்குள் பேசி முடித்துக் கொள்வது நல்லது.
பெயர், புகழ், மரியாதை
அதற்குப் பிறகு செய்தால் மெதுவாக நடக்கும். சனி 28 ஆம் தேதிக்குப் பிறகு வக்கிர நிவர்த்தியாகிறார். சனி வக்கிரமாக இருந்தால் கடன், வேலை, குடும்பம் சார்ந்த விஷயங்கள் எல்லாம் 28 ஆம் தேதி வரை அற்புதமாக இருக்கும். அதற்குப் பிறகு ஸ்லோவாக நடக்க ஆரம்பிக்கும். உங்கள் ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் யோகம் அதிகமாக வேலை செய்யும். இல்லையெனில் 28 ஆம் தேதிக்குப் பிறகு யோகம் உண்டாகும். வாக்கு ஸ்தானதிபதி நன்றாக இருப்பதால் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய செயலுக்கு பெயர், புகழ் ஏற்படும். எதைத்தொட்டாலும் வெற்றி பெறும் யோகத்தைப் பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications