Rasi Palan This Week: "காசு பணம் துட்டு மணி மணி".. கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
வார ராசி பலன்: டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தைரியம் ஏற்படும். நல்ல அனுகூலங்கள் ஏற்படும் காலகட்டம். நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய அற்புதமான காலகட்டம். அடிவயிறு, கழிவுப் பாதை, அலர்ஜி தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிறிய பாதிப்புகளும் பெரிய பாதிப்புகளைத் தரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
தடைகள் நீங்கும்
பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் காணப்படும். இதுவரை தடைபட்டுக் கொண்டே இருந்து வந்த இழுபறியான நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். திருமணத் தடை, புத்திர சந்தானத் தடை எல்லாம் நீங்கும். உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இந்து வந்த மனத் தாங்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
தொழிலில் லாபம்
முன்னேற்றத்தின் அளவு அபரிமிதமானதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு கால சர்ப்பத்தின் பாதிப்பு ஏற்படும் என்பதால் கோளார் பதிகத்தைக் கேட்பது நல்லது. டிசம்பர் மாதம் வரை தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். இனி காலம் உங்களுக்காக கனிந்து வரும்.
முன்னேற்றம்
உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்படும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் திடீரென வெளிச்சம் பெறுவீர்கள். தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். திடீர் திடீரென உங்களுக்குத் தேவையான விஷயங்களை எல்லாம் செய்து கொள்ளும் அற்புதமான காலகட்டம்.
வழிபாடு
கண்டகச் சனி உங்களுக்கு நடந்து கொண்டிருப்பதால் எந்த விஷயத்திலும் ரோஷம் பார்த்து கோபப்படாமல் எல்லோரிடமும் இணக்கமாகச் செல்வது உங்களுக்கு நன்மையையும், ஆதாயத்தையும் ஏற்படுத்தும். பெருமாள் வழிபாடு, பெருமாள் அவதார வழிபாடு, நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications