Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி யோகம்.. 2 விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள்களை கையாளும் கன்னி ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். காது, மூக்கு, தொண்டை, பற்களில் பிரச்சனைகள் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும்.
முன்னேற்றம்
துணை விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தைரியம் ஏற்படும். எந்த விஷயங்கள் வந்தாலும் அதனை சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் போன்ற அனைத்து மாற்றங்களும் ஏற்படும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
யோக பலன்
தொடர்ச்சியாக இருந்து வந்த பிரச்சனைகள், மனத் தாங்கல்கள் நீங்கும். தனிப்பட்ட முறையில் யோக பலன்கள் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும் காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத விஷயங்கள் அனைத்தும் நடைபெறும் அற்புதமான காலகட்டம். தொழிலில் எடுக்கம் புதிய முயற்சிகள் வெற்றிகளை ஏற்படுத்தும்.
தடைகள் நீங்கும்
திருமணத் தடை, புத்திர சந்தானத் தடை போன்றவை நீங்கும். குடும்பத்தில் சண்டை போட்டு பிரிந்திருந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்றுசேரக் கூடிய பிராப்தம் உண்டாகும். பெரிய நம்பிக்கையும் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். யோக பலன்கள் அதிகமாகப் பெறக்கூடிய ராசியினர். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.
முதலீடு
நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் தீரும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படும். குடும்பத்திலும், வெளியிடத்திலும் வார்த்தைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
பெருமாள் வழிபாடு தைரியத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தும். நாராயணியத்தில் 100 வது பாடலை கேட்பது மேன்மையைத் தரும். இந்த ஐப்பாசி மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சாப்பாடு, எலுமிச்சை சாறு, எலுமிச்சை ஊறுகாய் தானமாக கொடுப்பது அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்











Click it and Unblock the Notifications