Rasi Palan This Week: கன்னி ராசியா.. கரன்ஸி ராசியா.. இந்த வாரம் சூப்பர் கலெக்சன்மா
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். தாய் வழி, தந்தை வழி உறவில் ஆதாயம் உண்டு. வீடு, நிலம், வண்டி, வாகனம் உள்ளிட்ட அசையும், அசையா பொருட்களின் சொத்து சேர்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். முதலீட்டில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாக்கு ஸ்தானம் பலமடைவதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.
வெற்றி
பழைய கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனம் தெளிவடைந்து தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். இதனால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். இழுபறியாக இருந்த தடைபட்ட காரியங்கள் நிவர்த்தியாகும்.
செல்வாக்கு.. தொழில்
எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்யோகம், தொழிலில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இது சரியான நேரம். சமூகத்தில் உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் இருந்த குறைகள் முற்றிலும் நீங்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு தடைகள் விலகி நல்ல பலன்கள் கிடைக்கும்.
கவனம்
தொழில் அதி அற்புதமான பலன்கள் உண்டாகும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள், வேறு தொழில் மாறுவது போன்றவை நடக்க வாய்ப்புள்ளது. பயணத்தில் மட்டும் சற்று கவனம். முக்கியமாக எதிர்பாலினத்தவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் இடைஞ்சல் இருக்க கூடாது. உங்கள் குடும்ப பிரச்னைகளிலும் அந்நியர்களின் தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்
காதல் விவகாரத்திலும் கவனம். எல்லாவற்றிலும் சந்தேகப்பட்டு, கேள்வி கேட்பதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முதுகு தண்டவடம் பிரச்னையில் அதிக எச்சரிக்கை வேண்டும். சிறிய பிரச்னையாக இருந்தாலும் மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை எடுத்துக் கொள்வது அவசியம். வியாழக்கிழமை தினம் குல தெய்வ வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications