This Week Rasi Palan: கன்னி ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. இந்த வாரத்தில் வரும் மாற்றங்கள்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kanni-weekly-rasi-palan-what-kind-of-benefits-kanni-virgo-people-will-get-from-september-21-to-28

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அதிகாரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. அதேபோல பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடும் இல்லாமல் இருப்பது நல்லது. கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்தில் காப்பாற்றும் நல்ல காலகட்டமாக இருக்கும். பெரிதாக கொடுத்த வாக்குகளையும் காப்பாற்றுவீர்கள்.

கடன்கள் தீரும் நேரம்

உறவுகள் மூலமாக நல்ல அனுகூலங்கள் காணப்படும். கடன்களை எல்லாம் அடைத்து முடிக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றியை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். எதிரிகள் விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வேற்று மொழி பேசும் நபர்களால் உங்களுக்கு ஆதாயம் பெறும் வாய்ப்புள்ளது. நரம்பு, அலர்ஜி தொடர்பான விஷயங்களில் ஏற்படும் பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியம்

பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, கோபத்தால் குடும்பத்தில் ஏற்படும் சங்கடங்களையும் கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் இருப்பது நல்லது.

மாற்றம், முன்னேற்றம்

தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் உண்டாகும். யோக பலன்களை அதிகளவில் அனுபவிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய செல்வாக்கு கூடும். அவசரப்பட்டு வேலையை விட்டு விடாமல் இருப்பது நன்மை பயக்கும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பகைகள் தீரும் காலகட்டம். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. எந்த முடிவை எடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. வியாழக்கிழமை நாட்களில் தேவி வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+