Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. இதுல மட்டும் கவனம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் தனுசு ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

யோகங்கள்
சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தனுசு ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த மாதம் ராசியதிபதியாக இருக்கக்கூடிய குரு பகவான் மீண்டும் 7 ஆம் வீட்டுக்கு வக்கிர கதியில் வருகிறார். இரட்டிப்பு மடங்கான லாபம் கிடைக்கும். ஆனால், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மனது தெளிவில்லாமல் இருப்பீர்கள். மன ரீதியாக அழுத்தங்களைச் சந்தித்து வருவீர்கள்.
குழப்பம் வேண்டாம்
அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருப்பதால் மன ரீதியாக பிரச்சனைகள் வரும். மனதை தைரியமாக வைத்துக் கொள்வது, தெளிவகா வைத்துக் கொள்வது அவசியம். வீடு, மனை, சொத்துக்கள் சார்ந்த விஷயங்கள் வந்தால் ஒருமுறைக்கு, இருமுறை பார்த்து செய்வது நல்லது. சனி பகவான் 12 ஆம் தேதி வக்கிர நிவத்தியாகிறார். 2க்கு உடையவன் வக்கிரமாகும்போது பண வரவேண்டிய இடத்தில் இருந்து நிறுத்தி வைத்திருப்பார்.
வக்கிரமாக இல்லையெனில் பணம் வரவு உண்டாகும். வக்கிரம் இல்லை என்றால் பணம், குடும்பம், பேச்சு சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே இருப்பார். 12 ஆம் தேதிக்குப் பிறகு வக்கிர நிவர்த்தியாவதால் பணம், பொருளாதாரம் நன்றாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் கைகூடும். செய்யும் வேலைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருப்பதால் விரயங்கள் நிறைய நடக்கும். 20 ஆம் தேதிக்குப் பிறகு ராசிக்குள் செவ்வாய் வருவதால் வெளிநாடு, வெளியூர் பயணங்கள், அதிர்ஷ்டம் பெறும் காலகட்டமாக இருக்கும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகளவில் கிடைக்கும். நிம்மதியான தூக்கம், பயணங்கள், பணத்தின் மூலமாக சந்தோஷம் கிடைக்கும்.
சுபவிரயம்
சுக்கிரன் 12 ஆம் வீட்டுக்கு வருவதால் சுப விரயங்கள் ஏற்படும். லாபம், வேலை, கடன் சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் 10 ஆம் தேதிக்கு முன்பு செய்து கொள்வது நல்லது. சுக்கிரன் சொந்த வீட்டையே பார்ப்பதால் வேலையில் இருந்து வந்த பிரச்சனைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. யோசித்து, நிதானமாக செய்தால் ஜெயிக்கும் வாய்ப்பு ஏற்படும். வருமானம், தொழில் சிறப்பாக இருக்கும்.
பணவரவு கொட்டும்
கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இரண்டாம் தாரத்துக்கான வாய்ப்பு ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும். விரய ஸ்தானம் வலுக்கப் போவதால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். குடும்பத் தேவைகளுக்கு செய்வது நல்லது. 4 கிரகங்களின் கூட்டுச் சேர்க்கை வெளிநாடு, வெளியூர் பயணம், சுற்றுலா செல்லும் யோகம், தீர்த்த யாத்திரை போன்றவற்றை கொடுக்கும். பண வரவு நன்றாக இருந்தாலும் விரயம் ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications