Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு கார்த்திகை மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் கன்னி ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

karthigai-matha-rasi-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-during-this-period

யோகங்கள்

சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கன்னி ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசியினருக்கு ராசியதிபதியான புதன் 10க்கு உடைய தொழில் ஸ்தானதிபதியாகி 2 ஆம் இடத்திலேயே வரும் 20 ஆம் தேதி வரை நிற்கிறார். அதற்குப் பிறகு 3 ஆம் வீட்டிற்கு வருகிறார். நல்ல பொருளாதாரம், வருமானம், பணவரவு, வசதி வாய்ப்புகள், வராத பணம் வந்து சேருவது போன்றவை உண்டாகும். கடுமையான முயற்சிகளைப் போடுவீர்கள். வாழ்க்கையில் இனி அடுத்தகட்டம் என்ன என்பதுபோன்ற சிந்தனைகள் அதிகமாகும்.

பணவரவு

மூன்றாம் இடம் என்பது பங்குச் சந்தை, எம்எல்எம், யூடியூப், சீட்டு போன்றவை சம்பந்தப்பட்டதாகும். அப்போது ராசியாதிபதிகாவும், 10 ஆம் அதிபதியாகவும் இருக்கக் கூடியவர் 3 ஆம் வீட்டுக்கு வருவது இது சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பண வரவையும், நல்ல யோகத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுப்பார்.

2க்கு உரியவர் 2 ஆம் வீட்டில் இருக்கும் வரை பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். வசதி வாய்ப்புகள் வரும். பொருளாதாரம், பணவரவு அற்புதமாக இருக்கும். அவரே 9 ஆம் அதிபதியுமாகி இரண்டாம் வீட்டில் இருக்கும்போது தந்தையின் மூலமாக பண வரவு உண்டாகும். ஏதாவதொரு வகையில் உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் மாதமாக இருக்கும்.

தொட்டது துலங்கும்

தந்தை சொத்து, பூர்வீக சொத்து இவை பற்றி பேசுவதென்றால் 10 ஆம் தேதிக்குள் அதனை செய்து கொள்வது நல்லது. செவ்வாயைப் பொருத்தவரை 20 ஆம் தேதி வரை மூன்றாம் வீட்டில் இருக்கிறார். நல்ல அமைப்பாக இருக்கும். நீங்கள் செய்கின்ற அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை, சொத்து சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறும்.

ஆரோக்கியம் ரீதியான விஷயங்கள் நன்றாக இருக்கும். மன ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மனது சந்தோஷமாக இருக்கும் வாய்ப்பு ஏற்படும். சனி பகவானைப் பொருத்தவரை 12 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியாகிறார். அப்போது, கண்டகச் சனியில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் உங்களுக்கு குடும்பம், குடும்பம் சார்ந்த விஷயங்கள், திருமணம் சார்ந்த விஷயங்களை 12 ஆம் தேதிக்குள் பார்த்துக் கொள்வது நல்லது.

அடுத்தடுத்து யோகம்

சனி வக்கிரமாக இல்லையெனில் இதுபோன்ற விஷயங்களை 12 ஆம் தேதிக்கு மேல் வைத்துக் கொள்வது நல்லது. குரு பகவானைப் பொருத்தவரை 19 ஆம் தேதிக்குப் பிறகு 10 ஆம் வீட்டிற்கு வருகிறார். அங்கு வக்கிர கதியில் இருக்கப் போகிறார். 4, 7க்கு உடையவர் 10 ஆம் இடத்திற்கு வரப் போகிறார். குரு 10 ஆம் இடத்திற்கு வரும்போது மிகப்பெரிய யோகங்கள் ஏற்படும்.

தொழில் வளர்ச்சி, வீடு சார்ந்த விஷயங்கள் கைகூடி வருவது, பார்ட்னர்களுக்கு இருந்து வந்த பிரச்சனை நீங்குவது, வியாபாரம் செழிப்பாக இருப்பது, தொழிலில் இருந்த மந்த நிலை போன்றவை நீங்கும். தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும்.

தொழிலில் வளர்ச்சி

தொழிலுக்கு உண்டான சிந்தனைகள், அடுத்தகட்ட பயணங்கள் நிச்சயமாக நடப்பதற்கான அதீத வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். நல்ல தூக்கம் ஏற்படும். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது போன்ற நிலை ஏற்படும். மன நிம்மதி, அதீத தைரியம் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+