Karthigai Matha Palan: கடக ராசியை பிடிச்ச கஷ்டம் இனி இல்லை.. அதிர்ஷ்டம் ஆன் தி வே
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் கடக ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

யோகங்கள்
சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியினருக்கு 19 ஆம் தேதி வரை குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளே தான் வக்ர நிலையில் பயணிக்க போகிறார். 19 ஆம் தேதிக்கு பிறகு அவர் 12 ஆம் இடத்திற்கு வக்ர கதியிலேயே பெயர்ச்சி ஆகிறார். சுப செலவுகள் நிச்சயம் உண்டு. சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கிய முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும்.
பண வரவு
பண வரவு திருப்தியாக இருக்கும். தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் விருத்தியடையும். திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டங்கள் இருக்கும். உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடையும். சமூகத்தில் பேச்சு மதிப்பு, மரியாதை கூடும். முயற்சிகள் அனைத்திலும் நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்களில் வெற்றி கிடைக்கும்.
சொத்து
நிலம், வீடு, வாகனம், ஆபரணம் உள்ளிட்ட அசையும் அசையா சொத்து சேர்க்கை உண்டு. குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. பயணங்களால் ஆதாயம் உண்டு. உங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரால் ஆதாயம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி, நிம்மதி ஏற்படும்.
கவனம்
குரு உச்ச நிலையில் வக்ரம் அடைவதால் தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ரத்த பந்த உறவுகளிடம் சற்று சுதாரித்து இருக்க வேண்டும். உத்யோகத்திலும் தடைகள் பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். சிலருக்கு கைக்கூடி வந்த வேலை வாய்ப்பு தட்டிப் போவதற்கு வாய்ப்புள்ளது. முருகன் வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications