அதிசார குரு பெயர்ச்சி பலன் 2021: கடக ராசிக்கு பலன்கள், பரிகாரங்கள்
அதிசார குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சில அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. திடீர் தன வரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
சென்னை: குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். அதிசார குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு குருவின் பொன்னான பார்வையால் திடீர் தன வரவு அதிகரிக்கும். குருபகவான் ஏப்ரல் 5ஆம் தேதி அதிசாரமாக கும்ப ராசிக்கு பயணம் செய்யப்போகிறார். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப் போகிறார். இந்த அதிசார குரு பெயர்ச்சி மற்றும் குருவின் பார்வையால் கடக ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் ஒரு ராசியில் ஒராண்டு காலம் பயணிப்பார். சில நேரங்களில் வேகமாக முன்னோக்கி வேறு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். குருவின் இந்த வேகமான பயணமே அதிசார குரு பெயர்ச்சியாகும். காலபுருஷ தத்துவத்தின் படி குரு பகவான் தற்போது பத்தாம் வீடான மகர ராசியில் பயணம் செய்கிறார். அதிசாரமாக சஞ்சரிக்கும் குருபகவான் 11ஆம் வீடான கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்கு குரு பகவான் 7ஆம் வீட்டில் இருந்து எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார்.
குருபகவான் பார்வை கடக ராசிக்காரர்களுக்கு இரண்டு, நான்கு, 12ஆம் வீடுகளின் மீது விழுவதால் குடும்பம் குதூகலமடையும், சுகங்களும் சந்தோஷமும் அதிகரிக்கும். நிம்மதியான உறக்கம் தேடி வரும். அதிசார பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும். இன்னும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

குருவினால் குதூகலம்
சனியுடன் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரித்த சனியுடன் நீச்சம் பெற்ற குரு இணைந்திருந்தார். இன்று முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் பயணத்தை ஆரம்பிக்கிறார். எட்டாம் வீடு என்பதால் பயப்பட வேண்டாம். ஒன்பதாம் வீட்டிற்கு உடைய குரு எட்டில் வந்தால் வீடு கட்டும் சூழ்நிலை ஏற்படும். வங்கிக்கடன் கிடைக்கும். திருமணம், கல்விக்காக சில நேரங்களில் கடன்வாங்க வேண்டியிருக்கும்.

வேலையில் முன்னேற்றம்
இந்த 161 நாட்களும் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் போது 41 நாட்கள் செவ்வாய் சாரத்தில் பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் கிடைக்கிறது. உழைப்பு அதிகரிக்கும். வேலை தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திற்காக அதிக செலவு செய்வீர்கள். உழைப்பு உயர்வு தரும் என்பதை இந்த கால கட்டத்தில் புரிந்து கொள்வீர்கள்.

திருமணம் சுப காரியம்
இரண்டாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் செய்யும் வேலையில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் சுப காரியம் நடைபெறும். சகோதர சகோதரிகள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

சுப விரையங்கள்
ராகுவின் சாரத்தில் குரு பயணிக்கம் போது வாக்கு ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் புதிய முயற்சிகள் ஜெயிக்கும். செய்யும் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து அதிகரிக்கும். திடீர் அதிஷ்டம் ஏற்படும்.
உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புத்திர யோகம் கிடைக்கும்.சுபவிரையங்கள் அதிகம் நடைபெறும் என்பதால் கையிருப்பு கரையும்.

குடும்பத்தில் சந்தோஷம்
கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை தவிர்த்து விடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். சொத்துக்கள் சேரும். இந்த அதிசார குரு பெயர்ச்சியால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். குரு திசை, குருபுத்தி, குரு அந்தாரம் நடைபெறுபவர்களுக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. இந்த அதிசார குரு பெயர்ச்சி காலத்தில் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications